AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி ஸ்பெஷல்… மரகத நாணயம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

Maragadha Naanayam 2 Movie First Look Poster | நடிகர் ஆதியின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி வரும் படம் மரகத நாணயம் 2. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது வைரலாகி வருகின்றது.

தீபாவளி ஸ்பெஷல்… மரகத நாணயம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
மரகத நாணயம் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Nov 2026 19:55 PM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆதி (Actor Adhi). தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி அவ்வபோது படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார் நடிகர் ஆதி. இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு மொழியில் படங்களில் நடித்து வந்த நடிகர் ஆதி பிறகு தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஆதியின் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மரகத நாணயம். இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேண்டசி ட்ராமா பாணியில் வெளியான அந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு உருவாக்கி உள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் மரகத நாணயம் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.

மரகத நாணயம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ:

இந்தப் படத்தில் நடிகர் ஆதி உடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் இன்றி புதிதாக நடிகர்கள் பலர் இணைந்து நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Mr Bhaarath: கலக்கல் காமெடி கதையில்… நடிகர் பாரத்தின் மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

மரகத நாணயம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Scene Movie: ஓ ஹிட்டா.. சீன் திரைப்பட FDFS பார்த்த இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!

Follow Us