படப்பிடிப்பை நிறைவு செய்தது மரகத நாணயம் 2 படக்குழு – வைரலாகும் வீடியோ!
Maragatha Naanayam 2 movie shooting wrapped | நடிகர் ஆதியின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் மரகத நாணயம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆதி. இவர் தெலுங்கு சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஓகா வி சித்ரம் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான மிருகம் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் ஆதியின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஆதியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ட்ரைவ்.
கடந்த 2025-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மரகத நாணயம் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது.




படப்பிடிப்பை நிறைவு செய்தது மரகத நாணயம் 2 படக்குழு:
அதன்படி மரகத நாணயம் பாகம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மரகத நாணயம் 2 படக்குழு தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் தன்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்… வைரலாகும் வீடியோ!
மரகத நாணயம் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The coin has been found. The adventure begins again. 🪙🔥
And that’s a wrap on #MaragadhaNaanayam2 🎬
இரும்புறை அரசன் is coming to hunt you all…very soon ⚔️@aadhiofficial #Sathyaraj @priya_Bshankar @nikkigalrani @Danielanniepope #Munishkanth @Arunrajakamaraj #Anandaraj… pic.twitter.com/8bMDenWVjN
— Passion Studios (@PassionStudios_) October 2, 2026
Also Read… அப்பா – அம்மாவை நான் வெவ்வேறு விதங்களில் ஒப்பிடுவேன்… ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்