ட்ரெயினில் ப்ரோமோஷன்.. அப்பா குட்டி படத்திற்காக வித்தியாசமான ப்ரோமோஷனில் இறங்கிய விஜய் ஆண்டனி!
Appa Kutty Movie Train Promotion: தென்னிந்திய திரைத்துறையில் மக்களிடையே இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு செயல்களை செய்துவருபவர் விஜய் ஆண்டனி. இவரின் அப்பா குட்டி திரைப்படமானது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் ஆண்டனி ட்ரெயினில் சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மக்களிடையே பேசப்பட்டுவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் தொடந்து வெளியாகிவருகிறது. குறிப்பாக இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் அப்பா குட்டி (Appa Kutty Movie). இயக்குநர் மு. மாறனின் (Director Mu. Maran) இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது 2026 நவம்பர் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. அப்பா மற்றும் மகள் பாச போராட்ட கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டிருந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் திரையரங்கு சந்திப்புகளை விஜய் ஆண்டனி செய்துவருகிறார். இந்நிலையில் அப்பா குட்டி படத்திற்காக விஜய் ஆண்டனி செய்த வித்தியாசமான ப்ரோமோஷன் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அனைத்தையும் ரசித்துப் பார்ப்பேன்.. திரைப்படங்கள் குறித்து சாய் பல்லவி பகிர்ந்த விஷயம்!
அப்பா குட்டி பட ப்ரோமோஷனை சிறப்பாக செய்த விஜய் ஆண்டனி:
நடிகர் விஜய் ஆண்டனி, அப்பா குட்டி படத்திற்காக ப்ரோமோஷன் பணிகளில் சிறப்பாக இருந்துவருகிறார். அந்த விதத்தில் சென்னையிலிருந்து கோவைக்கு ப்ரோமோஷனுக்காக விஜய் ஆண்டனி சென்றிருந்த நிலையில், போகும் வழியிலே ப்ரோமோஷன் செய்துள்ளார். அவர் சென்னையிலிருந்து கோவைக்கு சாதாரண மக்களுடன் ட்ரெயினில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி கருணை காட்டமுடியும்? முனியம்மாளை கேள்வியால் தாக்கிய விஜய் சேதுபதி – ப்ரோமோ இதோ!
செல்லும் அந்த ரயில் பயணத்தில் மக்களுடன் அவர் கலந்துரையாடி அப்பா குட்டி படத்தை ப்ரோமோஷன் செய்துகொண்டே சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
அப்பா குட்டி படத்தை ட்ரெயினில் விஜய் ஆண்டனி ப்ரோமோஷன் செய்தது தொடர்பான வீடியோ பதிவு:
#VijayAntony taking promotions beyond the usual route! Personally interacts with passengers on his Chennai to Coimbatore journey, inviting them to watch #AppaKutty in theatres. ❤️ https://t.co/Fh2KYjLzjm
— Balaji (@RDBalaji) November 21, 2026
அப்பா குட்டி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மு. மாறன் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் ஆண்டனி நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதான்யா உள்ளிட்ட பலரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.