கீர்த்தி மற்றும் கிருத்தி நடனத்தில்… ஜனவரி 12 விடுதல படத்திலிருந்து வெளியான டிவிக்கி டிவிக்கி பாடல்!
Diviki Diviki Video Song: தெலுங்கு சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் அனில் ரவிபுடி. இவரின் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் இருவரும் இணைந்து நடித்துவரும் பிரம்மாண்ட படம்தான் ஜனவரி 12 விடுதல. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
டோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அனில் ரவிபுடி (Director Anil Ravipudi). இவர் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டான “பகவந்த் கேசரி” படத்தின் (Bhagavanth Kesari Movie) இயக்குநராவார். இவர் இயக்கத்தில் வெளியான இப்படம்தான் தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) நடித்திருந்த ஜன நாயகனாக ரீமேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஜன நாயகன் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பகவந்த் கேசரி படத்திற்கு பிறகு இயக்குநர் அனில் ரவிபுடி அடுத்தடுத்த படங்களை இயக்கிவந்தார். தற்போது இவரின் இயக்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஜனவரி 12 விடுதல. இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி (Venkatesh Daggubati), நந்தமுரி கல்யாண் ராம் (Nandamuri Kalyan Ram) இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) மற்றும் இளம் நடிகை கிருதி ஷெட்டி (Krithi Shetty) என இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து “டிவிக்கி டிவிக்கி” (Diviki Diviki) என்ற வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: படப்பிடிப்பை நிறைவு செய்தது விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படக்குழு – வைரலாகும் வீடியோ!
ஜனவரி 12 விடுதல படத்திலிருந்து டிவிக்கி டிவிக்கி பாடலை பகிர்ந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்:
#divikidiviki is here from #January12Vidudala
https://t.co/vFnzEQ11G7
An @AnilRavipudi blast 💥💥💥
— G.V.Prakash Kumar (@gvprakash) November 21, 2026
இந்த பாடலில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருதி ஷெட்டி இணைத்து நடனமாடியுள்ளனர். தங்களின் சிறப்பான நடனத்தின் மூலம் தற்போது இந்த பாடல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில் இந்த படமானது சிறப்பான கிராமத்து கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவருகிறது.
ஜனவரி 12 விடுதல திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:
இந்த படத்தில் கல்யாண் ராமுக்கு ஜோடியாக இளம் நடிகை கிருதி ஷெட்டி நடித்துள்ளார். அதுபோலவே நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமானது கிராமத்து பின்னணியை கொண்டுள்ள திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றியிருக்கும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாக வந்துள்ளதாம்.
இதையும் படிங்க: வெளியானது ஜெயிலர் 2 படத்திலிருந்து அன்ஃபினிஷ்ட் பிசினஸ் தீம்!
இப்படத்தின் டைட்டிலை போலவே, இந்த படமும் 2027ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதியில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.