முறைமாமன் கலாச்சாரம் குறித்து ராதிகா ஆப்தே சொன்ன சர்ச்சை கருத்து… கீர்த்தி சுரேஷின் ரியாக்ஷன் இதோ!
Keerthy Suresh responds Radhika Aptes comments | நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது சத்யவான் சாவித்திரி படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபதில் ராதிகா ஆப்தேவின் முறைமாமன் கலாச்சாரம் குறித்த கருத்திற்கு கீர்த்தி சுரேஷின் ரியாக்ஷன்.
தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் தொடர்ந்து படங்களில் நாயகியாக நடித்து வருவது போல அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான அக்கா இணையதள தொடர் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது சத்யவான் சாவித்திரி படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் நடிகை ராதிகாவின் முறைமான் கலாச்சாரம் குறித்த சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்து இருந்தார்.
அவர் முந்தையப் பேட்டியில் தான் நடித்த தெலுங்கு படம் ஒன்றில் தன்னை விட வயது அதிகம் உடைய தாய் மாமனை திருமணம் செய்துவது போல இருந்தது. அது மிகவும் அருவருப்பாக இருந்தது என்று தெரிவித்து இருந்தார். இது குறித்து கீர்த்தி சுரேஷிடம் உங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் பேசியது வைரலாகி வருகின்றது.




ராதிகா ஆப்தே சொன்ன சர்ச்சை கருத்து… கீர்த்தி சுரேஷின் ரியாக்ஷன்:
ஒரு திரைப்படத்தில் தான் தனது மாமாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டியிருந்தது என்று அவர் கூறியபோது, அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. பிற்காலத்தில்தான் அவர் நமது கலாச்சாரத்தைப் பற்றித்தான் பேசுகிறார் என்பதை உணர்ந்துகொண்டேன். நமது கலாச்சாரத்திற்கு முழு மரியாதை அளிக்கும் அதே வேளையில், நான் ஒருபோதும் அதற்கு இழுக்கு ஏற்படுத்தமாட்டேன். அவர்களுக்கு இதைப் பற்றித் தெரியாது என்பதால், நான் அவர்களுக்கு விளக்க மட்டுமே முடியும். இதுதான் நமது கலாச்சாரம் என்று என்னால் அவர்களுக்கு நிரூபிக்க முடியாது. கர்நாடகாவைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் தமிழ்நாட்டிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் இத்தகைய கலாச்சாரம் நடைமுறையில் உள்ளது என்ற தகவலைத்தான் நான் பகிர்ந்துகொண்டேன். கேரளாவில் இத்தகைய கலாச்சாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Also Read… Ajith Kumar: ரௌடியா? டேர் டெவில் படத்தில் அஜித் குமாரின் லுக் இதுவா? இணையத்தில் வைரலாகும் போட்டோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#KeerthySuresh responds to a question about #RadhikaApte’s comments on the Murai Maaman culture:
“I didn’t understand what she meant when she said she had to marry her uncle in a film. Only later did I realise that she was referring to the culture. With all due respect, I will never let down our culture. I can only explain it to them because they don’t know about it. I cannot prove to them that this is our culture. I don’t know about Karnataka, but I was just sharing information that this culture exists in Tamil Nadu and Andhra Pradesh. Kerala doesn’t have this culture.” https://t.co/CXf31gLqbQ
— Movies Singapore (@MoviesSingapore) November 18, 2026