‘செஃப் ஆக ஆசைப்பட்டேன்… ஒரு விபத்தைப் போல நடந்தது….’ – நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ்
Dhanush's Chef Dream Revelation : மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் தனுஷ் இணைந்து நடித்துள்ள ஓம் திரைப்படம் நவம்பர் 6, 2026 நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், (Dhanush) தான் ஒரு சமையற்கலை நிபுணராக ஆசைப்பட்டதாகவும் நடிகரானது விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.
விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், (Dhanush) தான் ஒரு சமையற்கலை நிபுணராக ஆசைப்பட்டதாகவும் நடிகரானது விபத்து என்றும் தெரிவித்துள்ளார். மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் தனுஷ் இணைந்து நடித்துள்ள ஓம் திரைப்படம் நவம்பர் 6, 2026 நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். செம்மரக் கடத்தில் பின்னணியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செஃப் ஆக ஆசைப்பட்டதாக நடிகர் தனுஷ் பேச்சு
ஓம் படத்தின் வெளியீட்டுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தனுஷ் தனது லட்சியம் உள்ளிட்டவை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பேடிய நடிகர் தனது, நான் சமையல் கலை நிபுணராக ஆசைப்பட்டேன். கடவுள் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதையே தந்துள்ளார். அவர் மீது முழு நம்பிக்கை வைத்து அவரிடம் சரண்டைந்து விடுவேன்.
இதையும் படிக்க : Arasan Movie: அரசன் படத்திலிருந்து அனிருத் விலகிட்டாரா? தயாரிப்பாளர் விளக்கம்!




நமக்கு எது சிறந்தது என்று கடவுளுக்கு தெரியும். நான் செஃப் ஆக விரும்பினேன். நடிகரானது ஒரு விபத்தை போல் நடந்து விட்டது. எனது பெற்றோரின் ஆசிர்வாதத்தால் தான் எனது வாழ்வில் அனைத்தும் நடந்துள்ளன. எனது ரசிகர்களின் ஆதரவுதான் எனது வளர்ச்சிக்கு காரணம். இதில் எனக்கு எந்த பங்கும் கிடையாது. நான் ஒரு கருவி மட்டும்தான் என்றார்.
புஷ்பா படத்துடன் ஒப்பீடு
மம்மூட்டி மற்றும் தனுஷ் உடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் ஓம் படத்தில் நடித்துள்ளனர். செம்மரக் கடத்தில் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ளதால் ஓம் படத்தையும் புஷ்பா படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. புஷ்பா படத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக இருக்கும் அவர், தனது புத்திசாலித்தனம், துணிச்சல் மற்றும் செல்வாக்கால் சிவப்பு சந்தனக் கடத்தல் உலகத்திற்குள் நுழைந்து, படிப்படியாக மிகப்பெரிய கடத்தல் மன்னனாக உருவெடுப்பதுதான் அந்தப் படத்தின் கதைக் கரு.
ஓம் படத்தில் தனுஷ், தமிழ்நாடு சிறப்புப் படையைச் சேர்ந்த ரகசியக் காவல் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. . மரம் வெட்டும் தொழிலாளி போல அதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்களைக் கண்டுபிடிப்பதே இவரது பணியாக இருக்கிறது. இந்த ஆபத்தான ஆபரேஷனுக்கு தலைமை தாங்கும் காவல் அதிகாரியாக சாய் பல்லவி நடித்துள்ளார். அதேபோல், கடத்தல் தொழிலை பின்னணியில் இருந்து கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்த நபராக மம்மூட்டி நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : ஃபினாலே வாரப் போட்டியில் மற்றொரு டாஸ்க்.. அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!
இதற்கிடையில் மம்மூட்டியின் ஓம் படமும் துல்கர் சல்மான் நடித்த AOT திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகிறது. ஒரே நாளில் அப்பா மற்றும் மகன் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிலையில் இருவரும் ஒரே வீடியோவில் தோன்றி தங்கள் படங்களுக்கு புரோமோஷன் செய்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.