AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மகள் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை குறித்து பரவும் வதந்தி… நடிகர் அர்ஜுன் கொடுத்த விளக்கம்!

Arjun provides a clarification about his daughter Aishwaryas married life | ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை தொடர்பாக கடந்த சில நாட்களாக பல தகவல்கள் வைரலாகி வருகின்றது. அப்படி வைரலாகும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அர்ஜுன்.

மகள் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை குறித்து பரவும் வதந்தி… நடிகர் அர்ஜுன் கொடுத்த விளக்கம்!
ஐஷ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி ராமையாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 Nov 2026 15:56 PM IST

பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் (Arjun Sarja). இவர் அதிக அளவில் தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நாயகனாக கலக்கி வந்த இவரை ரசிகர்கள் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்றே அன்புடன் அழைத்து வருகின்றனர். மேலும் நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும் இளையமகள் பெயர் அஞ்சனா அர்ஜூன். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையையே கவனத்தை ஈர்த்து உள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துட்ன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்ததை ரசிகர்களும் அவர்களின் சமூகவலைதளப் பக்கங்களின் மூலம் தெரிந்துகொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தில் உமாபதி ராமையா மற்றும் அவரின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளாதது ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கையில் பல கேள்விகளை எழுப்பியது. அந்த நிகழ்விற்கு பிறகு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கத் தொடங்கினர்.

மகள் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை குறித்து பரவும் வதந்தி:

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் சார்ஜா தற்போது தனது மகளின் திருமண வாழ்க்கை தொடர்பாகவும் அவரின் ஒழுக்கத்தை கேள்வி எழுப்பும் விதமாக சமூக ஊடங்களில் பரவு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஒரு இணையதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இரண்டாவது மகளின் திருமணத்திற்கு வாழ்த்தும் அன்பும் கொடுத்த அனைவருக்கும் நன்றி என தொடங்கி தனது மூத்த மகளின் வாழ்க்கை குறித்து பொது வெளியில் பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருவதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவர் என்ன செய்ய வேண்டும் எது செய்ய கூடாது என்பதை தீர்மானிப்பதில் முழு சுதந்திரமும் அந்த பெண்ணுக்கே உள்ளது. என் மகள் மீதான வதந்திகள் பரவத் தொடங்கியதில் இருந்தே நான் எதுவும் பேசவேண்டாம் அவரே ஒரு முடிவு எடுக்கட்டும் என்று இருந்தேன். ஆனால் ஒரு தந்தையாக இந்த பதிவை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சீன் பட ஷூட்டிங்கின் போது நடிகர் நஸ்லேனுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த சூர்யா – என்னனு தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் அர்ஜுன் சார்ஜாவின் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

Also Read… Navoria: புலி பட இயக்குநரின் நவோரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Follow Us