Navoria: புலி பட இயக்குநரின் நவோரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Navoria Movie First Look: தமிழில் மக்கள் மத்தியில் நடிகராக பிரபலமானவர் விமல். இவரின் நடிப்பிலும், புலி பட இயக்குநர் சிம்புதேவனின் இயக்கத்திலும் புதிதாக உருவாகியுள்ள படம்தான் நவோரியா. இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் மிகவும் பிரபலமானவர் விமல் (Actor Vimal). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் சண்டைக்காரி (Sandakari Movie). கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில் இந்த திரைப்படமானது வெளியானது. இந்த படமானது மலையாளத்தில் 2012ம் ஆண்டில் வெளியான “மை பாஸ்” படத்தின் ரீமேக் திரைப்படமாம். இப்படத்தில் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகும் புதிய படங்களில் பேக் டூ பேக் நடிகர் விமல் நடித்துவந்தார். அதில் இயக்குநர் சிம்புதேவன் (Director Chimbu Deven) இயக்கத்தில் நடித்துவந்த திரைப்படம்தான் “நவோரியா” (Navoria – The Game For life).
இந்த திரைப்படமானது ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாடத்தில் ஷூட்டிங் எலாம் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது வெளியான இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அறம் செய்ய விரும்பு… உறியடி விஜய் குமாரின் அறிவு பட டீசர் வெளியீடு!
நடிகர் விமல் மற்றும் சிம்புதேவனின் நவோரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:
The game is about to begin! 🤯
Presenting the First Look Poster of #Navoria! The Game for Life 💥
Get ready for an exciting ride! 🥳
Produced By @tpcdreamhouse
Directed By @chimbu_deven 🎬
@ActorVemal @Aariarujunan @annsheetal1 @Bala_actor #Vadivukkarasi #ThambiRamaiah https://t.co/wOhMIhSSVW
— tpcdreamhouseofficial (@tpcdreamhouse) November 18, 2026
இந்த நவோரியா திரைப்படத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க, அவருடன் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் தம்பி ராமையா, சிங்கம்புலி, வடிவுக்கரசி, பாலா சரவணன், பிக் பாஸ் ஆரி, நிழல்கள் ரவி மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துவருவதாக கூறப்படுகிறது. இப்படம் ஜுமான்ஜில் போலவே ஒரு கேம் அட்வெஞ்சர் திரைப்படமாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சீன் பட ஷூட்டிங்கின் போது நடிகர் நஸ்லேனுக்கு சூப்பர் கிஃப்ட் கொடுத்த சூர்யா – என்னனு தெரியுமா?
அந்த விதத்தில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இயக்குநர் சிம்புதேவன் தமிழில் ஏற்கனவே புலி, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, முரட்டு சிங்கம் உள்ளிட்ட பல்வேறு காமெடி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் விமல் நடித்துள்ள நவோரியா திரைப்படமும் சிறந்த படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.