AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Arivu Movie: அறம் செய்ய விரும்பு… உறியடி விஜய் குமாரின் அறிவு பட டீசர் வெளியீடு!

Arivu Movie Teaser: தமிழில் பிரபலமான இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் உறியடி விஜய் குமார். இவரின் நடிப்பில் தமிழில் புதிதாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் அறிவு. கல்வி தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

Arivu Movie: அறம் செய்ய விரும்பு… உறியடி விஜய் குமாரின் அறிவு பட டீசர் வெளியீடு!
அறிவு பட டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Nov 2026 17:22 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான உறியடி (Uriyadi Movie) என்ற திரைப்படத்தின் மூலமாக, நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானவர் விஜய் குமார் (Vijay Kumar). இவருக்கு இந்த படமானது சிறப்பான வெற்றியை கொடுத்திருந்த நிலையில், இந்த படத்திற்கு பிறகு படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். இந்த படத்திற்கு பிறகு உறியடி 2 (Uriyadi 2), ஃபைட் கிளப் (Fight Club Movie), எலெக்ஷன் போன்ற திரைப்படங்களில் நடிகராக நடித்திருந்தார். மேலும் இவர் வெறும் நடிகரை மற்றும் இயக்குநராக மட்டுமல்லாமல், படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் (Soorarai Pottru Movie) வசன எழுத்தாளராக அவர் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களுக்கு பிறகு தற்போதும் சினிமாவில் நடிகராக நடித்தும் வருகிறார்.

தற்போது இவரின் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் அறிவு (Arivu Movie). இதை கழுகு திரைப்படத்தை இயக்கியிருந்த சத்யசிவா இயக்கியுள்ள நிலையில், சிறப்பாக கல்வி தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை தமிழ் இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எந்த தைரியத்துல என்ன வில்லனா நடிக்க சொல்ற? மம்முட்டி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர் தனஞ்செயன்!

இயக்குநர் பா. ரஞ்சித் பகிர்ந்த அறிவு திரைப்படத்தின் டீசர் குறித்த எக்ஸ் பதிவு:

உறியடி விஜய் குமாரின் அறிவு பட டீசர் எப்படி இருக்கு:

இந்த டீசரில் நடிகர் விஜய்குமார் ஒரு ஆசிரியராக நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் பழங்குடியின மக்களுக்கு அவர் கல்வியை கற்றுக்கொடுக்கும் நிலையில், அதனால் அவர் சந்திக்கும் சவால்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்து இந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான டீசர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அறிவு திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சிறப்பான கதைக்களத்தில் இந்த அறிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் குமார் ஹீரோவாக நடிக்க, கயல் ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சீசன் 9 புகழ் சுபிக்ஷா, தீபா சங்கர் மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்கள்.

இதையும் படிங்க: ஹாய் சாதிகா… கேள்விகளால் சாதிகாவை மிரளவைத்த லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படமானது வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us