AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கவனம்: வாழைப்பழத்துடன் இந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிடலாமா?

Combine With Bananas: வாழைப்பழத்துடன் பால், தயிர், ஓட்ஸ் மற்றும் நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடலாம். இந்த உணவுக் கலவைகள் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் மற்றும் செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் உணவின் அளவில் கவனம் செலுத்த வேண்டும்.

கவனம்: வாழைப்பழத்துடன் இந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிடலாமா?
வாழைப்பழம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Nov 2026 17:26 PM IST

வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் (Bananas) நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்க உதவுகின்றன. வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு வலுவான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. தயிருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவதும் பொதுவாகப் பாதுகாப்பானது. ஓட்ஸ் மற்றும் பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்களுடன் வாழைப்பழத்தைச் சேர்ப்பது ஆரோக்கியமான காலை உணவாக அமையும். உணவுக் கலவைகள் உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தின் அளவைக் கவனிப்பதுடன், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

Also Read: தினமும் காலையில் டீ, பிஸ்கட் சாப்பிடுகிறீர்களா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம்

அன்றாடம் பலரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் வாழைப்பழத்திற்கு முக்கிய இடம் உண்டு. எளிதில் கிடைக்கக்கூடிய இந்தப் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுடன், தசைகள் மற்றும் செரிமான செயல்பாடுகளுக்கும் உதவுகின்றன. ஆனால் வாழைப்பழத்துடன் சில உணவுகளைச் சேர்த்து சாப்பிடக்கூடாது என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது.

பாலுடன் வாழைப்பழம் சாப்பிடலாமா?

பலரும் வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க் ஷேக் தயாரித்துக் குடிக்கின்றனர். இந்தக் கலவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு வலுவான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இருப்பினும், லாக்டோஸ் ஒவ்வாமை அல்லது செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தயிருடன் சேர்த்து சாப்பிடலாமா?

வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது சிலருக்குப் பிடித்தமான உணவுக் கலவையாகும். தயிரில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளன. வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் கிடைக்கிறது. இவற்றை ஒன்றாகச் சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் தயிர் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் ஏற்படுபவர்கள் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

Also Read: தினமும் காலையில் டீ, பிஸ்கட் சாப்பிடுகிறீர்களா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

ஓட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்க்கலாமா?

வாழைப்பழத்துடன் ஓட்ஸ், பாதாம், வால்நட் போன்ற பருப்புகளைச் சேர்த்து சாப்பிடலாம். ஓட்ஸில் நார்ச்சத்தும், நட்ஸில் நல்ல கொழுப்புகள் மற்றும் புரதமும் உள்ளன. இவற்றுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடுவது காலை உணவுக்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த தேர்வாக இருக்கும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வாழைப்பழத்துடன் மற்ற பழங்கள் அல்லது உணவுகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்று பொதுவாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. உணவுக் கலவைகள் உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும் என்ற பல்வேறு கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தின் அளவைக் கவனிக்க வேண்டும்.

 

Follow Us