குடமுருட்டி பாலத்திற்கு மாற்றாக ரூ.25 கோடியில் புதிய பாலம்! துரை வைகோ பேட்டி
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பாலத்திற்கு மாற்றாக ரூ.25 கோடியில் புதிய பாலம் கட்டப்பட உள்ளதாக திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். 1872-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார். தற்போதைய 7 மீட்டர் பாலத்திற்கு அருகில் 10.5 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கி, 15 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழைய பாலமும் சீரமைக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றார்.
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பாலத்திற்கு மாற்றாக ரூ.25 கோடியில் புதிய பாலம் கட்டப்பட உள்ளதாக திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். 1872-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார். தற்போதைய 7 மீட்டர் பாலத்திற்கு அருகில் 10.5 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கி, 15 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழைய பாலமும் சீரமைக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் விசாரணையில் தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடுகள், மாநகராட்சி குப்பை அகற்றும் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார். தேவைப்பட்டால் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய முதலமைச்சருக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
