குஜராத் மாநிலம் சூரத்தின் மோட்டா வராச்சா பகுதியில் மகாதேவ் கிளாத் சென்டர் என்ற ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருபவர் ராம்ஸ்வரூப் முண்டே. இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 20 பெண் ஊழியர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை தீபாவளி போனஸாக வழங்கியுள்ளார். இதற்காக மொத்தம் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான தொகையை அவர் செலவிட்டுள்ளார். இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஊழியர்களுக்கு இந்தப் பணத்தை சாதாரண கவர்களில் கொடுக்காமல், வெள்ளி நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட பூஜை தட்டுகளில் பணக்கட்டுகளாக வைத்துக் கொடுத்துள்ளார். அதில் 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இடம்பெற்றிருந்தன. மேலும், ஊழியர்களின் கணவர்களுக்குப் பதிலாக அவர்களது மனைவிகளே இந்தப் பரிசுத் தட்டுகளை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்த நிகழ்வு மேலும் நெகிழ்ச்சியான தருணமாக மாறியது. எதிர்பாராத இந்தப் பரிசைப் பார்த்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். சிலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர்.