
தீபாவளி - Diwali
தீபாவளி திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். தீப ஒளித்திருநாள் என்பதே தீபாவளியாக அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசை நாளில் இந்த விசேஷ நாள் கடைபிடிக்கப்படுகிறது. வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. சில நேரங்களில் இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை ஆகிய தினங்களிலும் வரும். இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் தீபாவளி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாடுவதற்கு பல புராண காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் நரகாசுரனை கிருஷ்ண பகவான் அழித்த நாளே தீபாவளி என நம் அனைவராலும் நினைவு கூறப்படுகிறது. தீபாவளி தினத்தில் வீடுகளை விளக்குகளால் அலங்கரித்தல், எண்ணெய் வழிபாடு, புத்தாடை அணிதல் இறை வழிபாடு, பட்டாசு வெடித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இத்தகைய தீபாவளி ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரும். அப்படியான சிறப்பு நாள் தொடர்பான தகவல்களை நாம் காணலாம்.
Diwali 2025 Astrology: தீபாவளிக்குப் பின் இந்த 4 ராசிகளுக்கும் நல்ல நேரம் பிறக்கும்!
2025 தீபாவளி அக்டோபர் 20 அன்று வருகிறது. இதனைத் தொடர்ந்து புதன் பெயர்ச்சி அக்டோபர் 24 அன்று நிகழ்கிறது. மிதுனம், சிம்மம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த தீபாவளி மிகவும் அதிர்ஷ்டமாக அமையும். இந்த ராசிகளுக்கு பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, குடும்ப ஒற்றுமை போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: Sep 25, 2025
- 11:54 am IST
தீபாவளி போனஸ்.. ரயில்வே ஊழியர்களுக்கு சப்ரைஸ்.. மத்திய அமைச்சரவை அறிவிப்பு
Diwali Bonus For Railway Employees : தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக மத்திய அரசு வழங்க உள்ளது.
- Umabarkavi K
- Updated on: Sep 24, 2025
- 17:19 pm IST
Jana Nayagan: ஜன நாயகன் தீபாவளி… தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் படக்குழு
Jana Nayagan Movie Update: தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பான அப்டேட் ஒன்று, 2025 தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
- Barath Murugan
- Updated on: Sep 23, 2025
- 14:09 pm IST
தீபாவளிக்கு ஊருக்கு போக ரெடியா? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?
Diwali Special Trains : தீபாவளி பண்டிகைக்காக தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
- Umabarkavi K
- Updated on: Sep 23, 2025
- 14:09 pm IST
எக்கச்சக்க சலுகைகளுடன் தீபாவளி சேலை அறிவித்த ஒன்பிளஸ்.. ஸ்மார்ட்போன்களுக்கு கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள்!
OnePlus Diwali Sale 2025 | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல நிறுவனங்கள் அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. இதில் பல புதிய மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்க உள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Sep 23, 2025
- 14:09 pm IST
ஆயுத பூஜை, தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நாளை முன்பதிவு தொடக்கம்..
Special Trains For Diwali: பண்டிகை நாட்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 17, 2025) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Sep 23, 2025
- 14:09 pm IST
நோ தீபாவளி… நோ பொங்கல்… கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் புது தகவல்
Karuppu Movie : நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாகும் படம் கருப்பு என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருப்பதால் தற்போது படக்குழு மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 23, 2025
- 14:09 pm IST