Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Astrology

Astrology

ஜோதிடம் என்பது பரவலாக பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சமஸ்கிருத சொல்லில் இருந்து பிறந்த இந்த வார்த்தைக்கு நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி, இராகு, கேது ஆகிய 9 கிரகங்களை அடிப்படையாக கொண்டு ஜோதிடம் கணிக்கப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது அதன் நேரத்தினைக் கொண்டு அந்நேரத்தில் நவக்கிரகங்கள் இருக்கும் நிலையைக் கணக்கிட்டு தான் ஜாதகம் எழுதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தின் மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை கொண்டுள்ளனர். குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, கிரகங்கள் இணைப்பு, பிற்போக்கு தன்மை என பல வகைகளில் கிரகங்களின் செயல்பாடுகள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளும் சாதகமும், பாதகமும் பெறுகிறது. கிரகங்களின் பலன்கள் நம் ராசியில் சரியாக இல்லாதபோது அதற்கேற்ப பரிகாரங்களும் பரிந்துரை செய்யப்படுகிறது. வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாகக் கருதப்படும் நிலையில் அத்தகைய ஜோதிடத்தில் அடிப்படையில் நிகழக்கூடிய அனைத்து விதமான நிகழ்வுகளையும் செய்திகளாக நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

Astrology: சாதமாக அமையும் கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு செம லக் தான்!

2025 ஆகஸ்ட் 28 வரை ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ராசிகளுக்கு நவக்கிரகங்கள் சாதகமாக அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்த ராசிகளுக்கு வருமானம் அதிகரிப்பு, பிரச்சனைகளுக்கு தீர்வு, மன அமைதி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Astrology: கிரகங்களின் சாதகம்.. இந்த 6 ராசிக்கு நினைத்ததெல்லாம் நடக்கும்!

2025 ஆம் ஆண்டில், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் ராசிகளுக்கு குரு, சனி, ராகு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் வேலை, தொழில், வணிகத்தில் வெற்றி, வருமான வளர்ச்சி, நிதி லாபம் போன்ற பலன்களைப் பெறலாம். என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், முதலீடுகளில் லாபம், உயர் பதவிகள் என பல நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

அதிகரிக்கும் குருவின் பலம்.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்!

Astrology: 2025 ஜூலை 8ம் தேதி குரு மௌத்யம் நீங்கியதால், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிகளுக்கு அக்டோபர் 5 வரை குபேர யோகம் உண்டாகும். இந்த யோகத்தால் செல்வ வளர்ச்சி, வீடு, குழந்தை பாக்கியம், வேலை, வியாபாரத்தில் லாபம் போன்ற பலன்கள் கிடைக்கும். ராசிக்கேற்ப பலன்கள் மாறுபடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: 3 மாதத்துக்கு குரு யோகம்.. இந்த 6 ராசிக்காரர்கள் ரெடியா இருங்க!

ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்களில் குரு பகவான் அதிக பலம் பெறுகிறார். இதனால் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ராசிகளுக்கு பண வரவு, புதிய வீடு, குழந்தை பாக்கியம் போன்ற அற்புதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வருமானம் அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி இருக்கும் என சொல்லப்படுகிறது.

Baba Vanga Predictions: ஜூலை 5ல் பேரழிவு உண்டாகுமா? – புதிய பாபா வங்கா கணிப்பால் அச்சம்!

புதிய பாபா வங்காவின் 2025 ஜூலை 5ம் தேதி ஜப்பானில் ஏற்படப் போகும் பயங்கர சுனாமி கணிப்பு பற்றிய செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானின் கடல் நீருக்கடியில் வெடிப்பு, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

Astrology: சனி, சுக்கிரனின் பார்வை.. இந்த 6 ராசிக்கு அடிக்கப்போகும் யோகம்!

ஜூன் 30 முதல் ஜூலை 26 வரை சனி பகவான் சுக்கிர பகவானைப் பார்ப்பதால், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம். சனி-சுக்கிர நட்பு காரணமாக செல்வ வளர்ச்சி, சமூக அந்தஸ்து, பிரச்சினை தீர்வு, நிம்மதி ஆகியவை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் ராகு சாதகம்.. இந்த 6 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி!

2025 ஆம் ஆண்டு இறுதி வரை செவ்வாய் மற்றும் ராகு கிரகங்கள் வலுவாக இருப்பதால், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளுக்கு சாதகமான காலமாக அமையும். விடாமுயற்சி, தைரியம், உறுதிப்பாடு ஆகிய குணங்கள் மேம்படும். தொழில், வணிகம், நிதி நிலைமை மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.

Astrology: ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 6 ராசிக்கு திருமண யோகம் வந்தாச்சு!

ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை சுக்கிரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறது. இது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ராசிகளுக்கு திருமணத்தில் நல்ல பலன்களைத் தரும் என ஜோதிடம் கூறுகிறது. இவர்கள் ஜூலை மாதத்தில் திருமண முயற்சிகளைத் தொடங்கலாம். வெளிநாட்டு வரன், காதல் திருமணம் போன்ற வாய்ப்புகளும் உள்ளன.

சனி பகவானுக்கு பிடித்த எண்.. இந்த எண் ராசிக்கார்களுக்கு சனி ஆசி தேடி வரும்!

Number 8 in Numerology : சனி பகவான் கர்ம வினைகளை அளிக்கும் நீதியரசர் எனப்படுகிறார். எண் கணிதத்தில், 8 என்ற எண் சனி பகவானுடன் தொடர்புடையது. 8ம் எண் கொண்டவர்கள் சுறுசுறுப்பானவர்கள், தனித்துவமானவர்கள். சனி பகவானின் ஆசியைப் பெற, சனிக்கிழமைகளில் சனி கோவிலுக்குச் சென்று கடுகு எண்ணெய் அர்ப்பணிக்கலாம். இன்னும் சில பரிகாரங்களை பார்க்கலாம்

Astrology: ஜூலை 26 வரை இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்.. ஏன் தெரியுமா?

ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறது. இதனால் 5 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை, நிதி நிலைமை, காதல், திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: ரிஷப ராசியில் சுக்கிரன்.. 12 ராசிகளில் நடக்கப்போகும் மாற்றம்!

2025 ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை சுக்கிரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறது. இதனால் 12 ராசிகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மேஷ ராசிக்கு நிதிநிலை மேம்படும். ரிஷப ராசிக்கு மாலவ்ய மகா புருஷ யோகமும், மிதுன ராசிக்கு ஆடம்பர வாழ்க்கையும் அமையும். அதேபோல் கடகம் ராசிக்கு வருமானம் அதிகரிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பாரிஜாத யோகம்.. 3 ராசிக்கு செம லக்!

2025 ஜூன் 22 அன்று, 102 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய பாரிஜாத யோகம் உருவாகிறது. சிம்மம், கும்பம், மகரம் ராசிகளுக்கு இது மிகவும் சாதகமானது. கல்வி, வேலை, நிதி நிலைமை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணலாம். எதிர்பாராத பணவரவு, பதவி உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் அதிர்ச்சி.. அடுத்த 6 மாதங்கள் எப்படி இருக்கும்? – ஜோதிடர்கள் கணிப்பு!

2025-ம் ஆண்டு, பல துயர நிகழ்வுகளால் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஜோதிடர்கள், எதிர்காலம் மகாபாரத காலத்தைப் போன்ற உலகளாவிய போருக்கு வழிவகுக்கும் என கணித்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஈரான் போர் போன்றவை இதற்கு உதாரணமாகவும் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த ஆறு மாதங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான கணிப்புகளையும் கூறியுள்ளனர்.

Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் லட்சுமி கடாட்சம் தான்!

தங்கம் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அலங்காரப் பொருளாகும். ஆனால் ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது மிகவும் மங்களகரமானது என சொல்லப்பட்டுள்ளது. மேஷம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் தங்கம் அணிவதால் செல்வம், அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dream Astrology: உங்கள் கனவில் இதெல்லாம் கண்டால் விரைவில் டும் டும் டும் தான்!

பூக்கள், குங்குமம், வளையல்கள் போன்ற மங்களகரமான பொருட்களைக் கனவில் காண்பது திருமணம் விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது எனக் கூறப்படுகிறது. கோவில் அல்லது திருமண மண்டபத்தில் இருப்பதைக் கனவில் காண்பதும் நல்ல அறிகுறியாகும். அப்படியான கனவுகளின் அர்த்தம் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.