சனிப்பெயர்ச்சி 2026.. மீன ராசியினருக்கு அடிக்குது ஜாக்பாட்.. அளிக்கொடுக்க வருகிறார் சனி பகவான்..
Sani Peyarchi 2026: இந்த ஆரம்பக் காலக்கட்டத்தில் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படுவதோடு, நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகவும் வாய்ப்புண்டு. எனவே, இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டுப் புதிய வேலைக்கு மாற முயற்சிப்பது ஆபத்தானது. அதேபோல், பணப் பரிவர்த்தனைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்
நவகிரகங்களில் நீதிமானாகவும், கர்ம வினைப்பயன்களை வழங்குபவராகவும் போற்றப்படும் சனி பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வது மானுட வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாகும். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சனிப் பெயர்ச்சியானது, காலச்சக்கரத்தின் இறுதி ராசியான மீன ராசியினருக்கு (பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள்) அவர்களின் வாழ்வின் மிக முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுத் தரும் திருப்புமுனையாக அமையப்போகிறது.
இதையும் படிக்க: சந்திர கிரகணத்தின் போது இறுதிச் சடங்கு செய்யலாமா? ஆன்மிக நம்பிக்கை சொல்வது என்ன?
ஜென்ம சனியின் வருகை:
இந்த பெயர்ச்சியின் மூலம் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். மீன ராசிக்காரர்களுக்கு இது ‘ஏழரை சனி’யின் இரண்டாம் கட்டமான ‘ஜென்ம சனி’ காலத்தின் தொடக்கமாகும். ஜென்ம சனி என்றாலே வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற அச்சம் தேவையில்லை; இது உங்களை ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்காக இறைவன் கொடுக்கும் ‘பாடம்’ என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, மார்ச் 6 முதல் மே மாதம் இறுதி வரை சனி பகவானின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் சுயமாக சிந்திக்கும் திறன் குறையலாம் என்பதால், முக்கியமான முடிவுகள் எடுப்பதில் நிதானம் தேவை என்கின்றனர்.
சவால்களும் மாற்றங்களும்:
இந்த ஆரம்பக் காலக்கட்டத்தில் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படுவதோடு, நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகவும் வாய்ப்புண்டு. எனவே, இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டுப் புதிய வேலைக்கு மாற முயற்சிப்பது ஆபத்தானது. அதேபோல், பணப் பரிவர்த்தனைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதுடன், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தள்ளிப்போடுவது நிதி நிலையைச் சீராக வைத்திருக்க உதவும்.
ஜூன் 2026-க்குப் பிந்தைய மாற்றம்:
ஜூன் 2026-க்குப் பிறகு இந்த நெருக்கடியான தாக்கங்களிலிருந்து நீங்கள் படிப்படியாக வெளியே வரத் தொடங்குவீர்கள். சனி பகவான் இக்காலத்தில் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த அனுபவப் பாடங்கள், எதிர்காலத்தில் நீங்கள் பெரிய நிலைக்கு உயரப் பெரும் உதவியாக இருக்கும்.
பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்:
ஜென்ம சனிக் காலத்தில் மீன ராசிக்காரர்கள் உழைப்பு, பொறுமை, எளிமை மற்றும் கடமை ஆகிய நான்கு தாரக மந்திரங்களைக் கடைபிடிப்பது அவசியம். சோம்பலின்றி உழைப்பதும், எந்தவொரு செயலிலும் அவசரம் காட்டாமல் இருப்பதும் சனி பகவானின் அருளைப் பெற்றுத்தரும். மேலும், தினசரி 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தைத் தியானிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும்.
வெறும் வழிபாடுகளோடு நிறுத்திக் கொள்ளாமல், கஷ்டப்படும் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உணவு அல்லது நிதியுதவி போன்ற தான தர்மங்களைச் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஈஸ்வரனை வழிபடுவது தோஷங்களின் வீரியத்தைக் குறைக்கும்.
இதையும் படிக்க: உங்கள் ஜாதகத்தில் சுக்கிர தோஷம்?.. அறிகுறிகளும்.. எளிய தீர்வுகளும்.. முழு விவரம்!!
வெற்றி பெறுவது உறுதி:
மீன ராசிக்காரர்கள் இந்த ஜென்ம சனி காலத்தில் நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்கக்கூடாது. வாழ்க்கையில் வரும் சவால்கள் அனைத்தும் உங்களை மேருகேற்றவே என்பதை உணர்ந்து செயல்பட்டால், ஈஸ்வரனின் அருளால் அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வெற்றி பெறுவது உறுதி.