AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

Sri Sri Movie First Single Release Update: தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவரும் படம்தான் ஸ்ரீ ஸ்ரீ. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் நிலையில், இதன் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
ஸ்ரீ ஸ்ரீ பட முதல் பாடல் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 25 Jul 2026 21:29 PM IST

சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் ஹீரோவாக தொடர்ந்து, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் காந்தா (Kaantha). கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் தெலுங்கில் ஒப்பந்தமான புது படம்தான் ஸ்ரீ ஸ்ரீ (Sri Sri). இப்படமானது ஆரம்பத்தில் DQ41 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரம்மாண்டமாக ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இதை தெலுங்கு இயக்குநர் ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi) இயக்க, ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமார் என்ற நிறுவனம் தயாரித்துவருகிறது.

இந்த படமானது பள்ளி மற்றும் கல்லூரி பருவ காதலை மையமாக கொண்ட ஒரு வித்தியாசமான கதையில் உருவாகிவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அது உங்களுக்கு கட்டாயம் தெரிந்துவிடும் – இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஸ்ரீ ஸ்ரீ பட முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா:

துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே (Pooja hegde) முதல் முறையாக இப்படத்தின் மூலம் ஜோடியாக இணைந்துள்ளனர். நடிகை பூஜா ஹெக்டேவும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது எமோஷனலான காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: ராமாயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – நடிகர் யாஷ்

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் “பொம்மா பொம்மா” வரும் 2026ம் ஆண்டு ஜூலை 27ம் தேதியில் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாம். ஜூலை 27ம் தேதி மாலை 5:04 மணியளவில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ பட பொம்மா பொம்மா பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகி அதிக வாய்ப்புகள் உள்ளது. துல்கர் சல்மானின் நடிப்பில் மலையாளத்தில் ஐஅம் கேம் என்ற படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாகிறது. அதன் காரணமாக 2026ம் ஆண்டு இறுதி அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்ரீ ஸ்ரீ படமானது வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

Follow Us