Venky Atluri: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அது உங்களுக்கு கட்டாயம் தெரிந்துவிடும் – இயக்குநர் வெங்கி அட்லூரி!
Suriya-Mamitha Age Controversy: தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெங்கி அட்லூரி. இவரின் இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ள புது படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்திற்கு ஆரம்பத்தில் வந்த நெகடிவ் விமர்சனங்கள் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி மனம் திறந்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் புது திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And sons). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட் லூரி (venky Atluri) இயக்க, சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் சூர்யா அதிரடி தொழிலதிபராக நடிக்க, அவருக்கு ஜோடியான இளம் பெண்ணாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே உண்மையிலே கிட்டத்தட்ட 25 வயதிற்கும் மேல் வித்தியாசம் இருக்கிறது என கூறலாம். இந்நிலையில், இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் ஜோடி இணைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு இணையத்தில் வந்த எதிர்ப்பு, நக்கலான மீம்ஸ் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியுள்ளார். அண்மையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், மமிதாவை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: பர்த்டே பாய் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து கூறிய சிக்மா படக்குழு
மமிதா மற்றும் சூர்யா ஜோடிக்கு வந்த எதிர்ப்பு குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு:
அந்த பேட்டியில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரி, அதில் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் திரையரங்கிலிருந்து வெளியே வரும்போது, அந்தப் படம் தார்மீக ரீதியாகத் தவறானது அல்ல என்றும், நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள் என்றும் உணர்வீர்கள். இந்த படமானது அறிவிக்கப்பட்டபோது, சூர்யா சாருக்கு மமிதா பைஜு எப்படி ஜோடி சேர முடியும் என்று மீம்ஸ், ரீல்ஸ் மற்றும் ரீட்எடிட் கமெண்ட்களில் பார்த்தேன்.
இதையும் படிங்க: மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நல்ல மனிதர் விஜய் – புகந்து பேசிய ரீல் அம்மா
சூர்யா சாரும், கதாநாயகி தேர்வு குறித்து பலர் கேள்வி எழுப்புகிறார்கள் என சொன்னார். இந்த வேடத்திற்கு மமிதாவை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பது எங்களுக்கு இருவருக்கும் மட்டுமே தெரியும். ஆனால் டீசர் வெளியான பிறகு அனைவரும் அதை இயல்பாக்கிக்கொண்டனர்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Watching THE ONE groove is a different kind of happiness… never enough. ❤️#TheWeddingSong is out now 🫶🏻
Tamil – https://t.co/Ht5uO9YaFz
Telugu – https://t.co/YUbmyrWZLQ
Sung by THE ONE @Suriya_offl 🎙️
A @gvprakash Musical 🎧 #VishwanathAndSons #VASonAUG14th… pic.twitter.com/fLtVoZJiaA— Sithara Entertainments (@SitharaEnts) July 25, 2026
இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில், தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இப்படம் சூர்யாவிற்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.