மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நல்ல மனிதர் விஜய் – புகந்து பேசிய ரீல் அம்மா
Actress Revathi reminisces about her unforgettable moments with Thalapathy Vijay | தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேவதி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தளபதி விஜய் குறித்து புகழ்ந்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் எச் வினோத் எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ தளபதி விஜயின் வளர்ப்பு மகளாக நடித்து இருந்தார். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல்வாதியாக நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதே போல நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்து இருந்தார்.
மேலும் நடிகை ரேவதி இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜயின் அம்மா வேடத்தில் நடித்து இருந்தார். இவர் படத்தில் அதிக காட்சிகளில் வரவில்லை என்றாலும் அவர் வரும் காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் எமோஷ்னலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தளபதி விஜயின் ரீல் அம்மாவாக நடித்த நடிகை ரேவதி சமீபத்தில் தளபதி விஜய் குறித்து பாராட்டியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நல்ல மனிதர் விஜய்:
அந்தப் பேட்டியில் நடிகை ரேவதி பேசியதாவது, விஜய், மிகவும் சுவாரஸ்யமானவர். படப்பிடிப்புத் தளத்தில் அவர் மிகக் குறைவாகவே பேசுவார். ஆனால் மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நல்ல மனிதர். சில சமயங்களில் நாங்கள் ஆச்சரியப்படுவோம், இவர் எப்படி நடிக்கிறார்? பேசவே மாட்டாரே, பிறகு எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்? என்று ஆனால் அவருக்குள் ஒரு அக்கறையுள்ள இதயம் இருக்கிறது.
அவருடன் நான் நடித்த படம் தமிழன், அதில் நான் அவருக்கு அக்காவாக நடித்தேன் என் கதாபாத்திரம் இறந்துபோகும் ஒரு காட்சியில் என்னை ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைத்தார்கள். உறைந்துபோனது போல, கண்களைத் திறந்தபடியே நான் அதில் இருக்க வேண்டியிருந்தது. விஜய் வந்து மேடம் உங்களால் இதைச் செய்ய முடியுமா? பரவாயில்லையா? உங்களால் முடியுமா? என்று கேட்டார். நான் ஆம் நிச்சயமாக முடியும் என்று சொன்னேன். இப்போது அவருடைய ஜனநாயகன் படத்திலும் அவருக்கு அம்மாவாக நடிச்சி இருக்கேன் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… விஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட அப்பா குட்டி படக்குழு
இணையத்தில் வைரலாகும் நடிகை ரேவதி பேச்சு:
#Revathi reminisces about her unforgettable moments with #ThalapathyVijay..🤍
— Gv (@gowtham0725) July 24, 2026
Also Read… அந்த விசயத்திற்கு சூர்யா சார் சம்மதித்தது ஆச்சரியாமாக இருந்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி