AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

4வது நாளே வைல்டுகார்ட் என்ட்ரியா? பிக் பாஸ் 10ல் நுழைந்த காமம் மேன் நிகழ்ச்சி போட்டியாளர்!

Bigg Boss 10: பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி கிட்டத்தட்ட 4 நாட்களான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கிய 2வது நாளிலே பிளாக் பாண்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறினார். அவருக்கு பதிலாக 4வது நாளிலே வைல்ட்கார்ட் என்ரியாக பிக் பாஸ் தி காமம் மேன் போட்டியாளர் ஒருவர் நுழைந்துள்ளார்.

4வது நாளே வைல்டுகார்ட் என்ட்ரியா? பிக் பாஸ் 10ல் நுழைந்த காமம் மேன் நிகழ்ச்சி போட்டியாளர்!
மணிவண்ணன் வைல்டு கார்டு என்ட்ரிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Sep 2026 18:08 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் ஆண்டுதோறும் வெளியாகி வரவேற்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi), கடந்த பிக் பாஸ் சீசன் 8 முதல் தொகுத்துவரும் நிலையில், தற்போது தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியையும் அவரே தொகுத்துவருகிறார். இவர் படங்களில் பணியாற்றும் விதத்தில் அதே மற்றும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் வாரம் இரு எபிசோடுகளில் தோன்றிவருகிறார். பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி இன்றுடன் (10/09/2026) 4 நாட்களான நிலையில், இப்போதிருந்தே சண்டைகள் மற்றும் சுவாரஸ்யமாக வெளியாகிவருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் இருந்த நிலையில், பிளக்க பாண்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டிருந்தார். இவரையடுத்து தற்போது பிக் பாஸ் தி காமம் மேன் (Bigg Boss The Common Man) போட்டியாளர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் வேறுயாருமில்லை, மணிவண்ணன்தான் (Bigg Boss Manivannan).

இதையும் படிங்க: பெருமாளாக ரவி மோகன்.. பிறந்தநாளில் வெளியான தெலுங்கு படத்தின் அறிவிப்பு!

பிக் பாஸ் சீசன் 10ல் வைல்ட்கார்ட் என்ரியாக நுழைந்த பிக் பாஸ் காமன் மேன் போட்டியாளர்:

பிக் பாஸ் தி காமன் மேன் போட்டியாளர் நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியில் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சாதாரண மக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் இதில் கலந்துகொண்டனர். பிக் பேச சீசன் 10ல் இந்த நிகழ்ச்சியிலிருந்து, முனியம்மாள், ஷாமா, மற்றும் ஜேசன் போன்ற மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 10ல் நுழைந்தனர்.

இதையும் படிங்க: ஆளும் அணி Vs எதிர் அணி.. கேப்டனை சாடிய போட்டியாளர்கள்.. கண்ணீரில் சாத்விகா!

மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் இருந்த நிலையில், பிளாக் பாண்டி வெளியியேறிய காரணத்தால் மொத்தம் 18 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது 4வது நாளிலே வைல்ட்கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் கமான் மேன் போட்டியாளர் மணிவண்ணன் நுழைந்துள்ளார். இவர் நுழைந்த முதல் நாளையே, சக போட்டியாளரான சவின்யா வேலுவை கோபத்தில் கண்கலங்க வைத்துள்ளார். இது தொடர்பான புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த பிக் பாஸ் காமன் மேன் போட்டியாளர் மணிவண்ணன் குறித்த புரோமோ பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தொடங்கிய முதல்வாரத்தில் ஹவுஸ்சமேட்ஸ்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன் சாத்விகாவை மற்ற போட்டியாளர்கள் சாடி வருகிறார்கள். மேலும் காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்துவந்த போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் பிரச்சனையை கிளப்பிவருகிறார்கள். ஒரு புதுவிதமாக இந்த நிகழ்ச்சி தற்போது வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us