AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Bigg Boss: ஆளும் அணி Vs எதிர் அணி.. கேப்டனை சாடிய போட்டியாளர்கள்.. கண்ணீரில் சாத்விகா!

Bigg Boss 10 4th Day: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இன்று (10/09/2026) 4வது நாள் நடந்துவரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் பல விமர்சனங்களை பெற்றிருவருகிறது . இந்நிலையில் இன்று வெளியான 3வது புரோமோவில் கேப்டன் சாத்விகாவை சாடும் போட்டியாளர்கள் குறித்த புரோமோ வைரலாகிவருகிறது.

Bigg Boss: ஆளும் அணி Vs எதிர் அணி.. கேப்டனை சாடிய போட்டியாளர்கள்.. கண்ணீரில் சாத்விகா!
பிக் பாஸ் தமிழ் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Sep 2026 15:49 PM IST

தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார். இவரின் தொகுப்பில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சி கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பமான நிலையில், மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், தினமும் 1 மணிநேரமாக ஒளிபரப்பாகிறது. பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்தின் கேப்டனாக சாத்விகா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பெரும் எதிர்ப்பு முதல் நாளிலிருந்தே இருக்கிறது.

அந்த விதத்தில் ஆளும் அணி மற்றும் எதிர் அணி இருவரிடையேயும் பிரச்சனைகள் இருந்தது. இன்று (10/09/2026) வெளியான 3வது புரோமோவில் பிக் பாஸ் ஹவுஸ் கேப்டன் சாத்விகாவை மற்ற போட்டியாளர்கள் சாடும் புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:  என் அம்மாவிடம் அதை முதலில் சொன்னேன் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்!

பிக் பாஸ் சீசன் 10 4வது நாளின் மூன்றாவது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமானது. பிக் பாஸ் வீட்டின் முதல்வாரத்தில் கேப்டனாக சாத்விகாவை ஹவுஸ்சமேட்ஸ் தேர்ந்தெடுத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜன நாயகன் அறை இருக்கும் நிலையில், அரசியல் போல இந்த வீட்டில் ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாக இருக்கின்றனர். அந்த விதத்தில் ஆளும் அணியாக சாத்விகாவின் கீழ் பலரும் இருகிறார்கள். எதிர் அணியின் தலைவராக வினோத் பாபு இருக்கிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் கேப்டன் போட்ட சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ

இந்த புரோமோவில் சாத்விகா மற்றும் வினோத் பாபுவுக்கு இடையே வாக்குவாதங்கள் இருக்கிறது. மேலும் எதிர் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் கேப்டன் சாத்விகாவை சாடுவதுபோல இதில் உள்ளது;. இதனால மனம் நொந்துபோன சாத்விகா, கண்ணீருடன் அழும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் தொடங்கி 4வது நாளிலே இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடந்துவருவதால், இதன் மீது மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துவருகிறது. சீசன் 9-ஐ ஒப்பிடும்போது சீசன் 10 மீது நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Follow Us