AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நெல்லையில் 10 வயது மகள் கண்முன்னே தந்தை கொடூர கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.. இருவரை கைது செய்த தனிப்படை!

Nellai Murder 2 Arrested : திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடை 4 பேரில் இருவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர் .

நெல்லையில் 10 வயது மகள் கண்முன்னே தந்தை கொடூர கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.. இருவரை கைது செய்த தனிப்படை!
கொலையில் இருவர் கைது.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Sep 2026 15:19 PM IST

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் ( 52 வயது). இவர், அம்பை பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவருக்கு, சாந்தி என்ற மனைவியும், 10- ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். தற்போது, இவர்கள் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெருவில் வசித்து வருகின்றனர். கண்ணனின் மகள் வீட்டின் அருகே மற்றொரு தெருவில் செயல்பட்டு வரும் டியூசனில் படித்து வருகிறார். இந்த நிலையில், கண்ணனின் மகள் வழக்கம் போல நேற்று புதன்கிழமை மாலை டியூஷனுக்கு சென்றிருந்தார். அவரை, தந்தை கண்ணன் இரவில் அழைத்து வருவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அதன்படி, டியூஷன் வெளியே மகளுக்காக காத்திருந்த கண்ணனை அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென தாக்கத் தொடங்கியது.

10 வயது மகள் கண்முன்னே தந்தை வெட்டி கொலை

இதை சற்றும் எதிர்பாராத கண்ணன் சுதாரிப்பதற்குள், அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டியது. இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைத்தும் டியூஷனில் இருந்து வெளியே வந்த அண்ணனின் 10 வயது மகள் கண்முன்னே நடந்தேறியது. இதை பார்த்து அந்த சிறுமி அங்கேயே அலறி துடித்தார்.

மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!

சம்பவ இடத்தில் நெல்லை எஸ்.பி. விசாரணை

சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்த நிலையில், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிற்றனர். தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட கண்ணனின் சடலத்தை மீட்டு பிரயோத பரிசோதனை மேற்கொள்வதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேரில் இருவரை கைது செய்த தனிப்படை போலீஸ்

மேலும், இது தொடர்பாக கண்ணனின் உறவினர்கள் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கொலை சம்பவம் நிகழ்ந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், தலைமறைவாக இருந்த 4 பேரில் வெங்கடேஷ், சூர்யா இசக்கி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: கடமை தாண்டிய நேர்மை.. ரயிலில் தவறவிட்ட ரூ.13.64 லட்சம் பணப்பை.. உரியவரிடம் ஒப்படைத்த செங்கோட்டை ரயில்வே போலீஸ்!

Follow Us