AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவையில் நள்ளிரவில் தொழிலாளர்கள் தங்கிய கொட்டகையை உடைத்த ஒற்றை யானை!

கோவையில் நள்ளிரவில் தொழிலாளர்கள் தங்கிய கொட்டகையை உடைத்த ஒற்றை யானை!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Sep 2026 13:46 PM IST

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து பசுந்தீவனங்களை உண்டதுடன், அங்கிருந்த நாய்களையும் துரத்தியது.

பின்னர், கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்து, உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது. யானையின் சத்தம் கேட்டு விழித்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி அருகிலிருந்த கட்டிடத்தில் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதற்கிடையில், அப்பகுதியில் தொடரும் திடீர் மின்வெட்டால் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Follow Us