AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஒரு முதல்வராக பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.. முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது - எம்.பி கனிமொழி காட்டம்..

ஒரு முதல்வராக பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.. முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது – எம்.பி கனிமொழி காட்டம்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Sep 2026 07:41 AM IST

முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பதிலளிப்பார் என எதிர்பார்த்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாடு மோசமான சூழ்நிலையை நோக்கிச் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

செப்டம்படர் 8, 2026: முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது, தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பதிலளிப்பார் என எதிர்பார்த்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாடு மோசமான சூழ்நிலையை நோக்கிச் செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து முதலமைச்சர் தெளிவான பதிலை மக்களுக்கு அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பழைய விவகாரங்கள் மற்றும் சில விசாரணை ஆணைய அறிக்கைகள் குறித்து பேசியதாக கனிமொழி விமர்சித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய விதம் மிகவும் கீழ்த்தரமானதாக இருந்ததாகவும், பதில் கேட்கும்போது அதற்கு பதிலளிக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பது முறையல்ல என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Follow Us