மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்..
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன. காலை 7 மணிக்குப் பிறகு அம்மன் சன்னதி அருகே உள்ள சித்தி விநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன. காலை 7 மணிக்குப் பிறகு அம்மன் சன்னதி அருகே உள்ள சித்தி விநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை நடைபெறுகிறது. செப்டம்பர் 9-ம் தேதி வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
செப்டம்பர் 11-ம் தேதி முதல் வடக்கு ஆடி வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாகசாலையில் 182 யாக குண்டங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. செப்டம்பர் 11 முதல் 16 வரை பக்தர்களுக்கு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரை நேரடியாக தரிசிக்க அனுமதி இல்லை. செப்டம்பர் 16-ம் தேதி உப தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 முதல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன.
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வசாதாரணமாக உலா வரும் பன்றி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்..
முதல்வர் விஜய்யின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது - எம்.பி கனிமொழி
மாமதுரை திருவிழா 2.0 - பட்டாசு வெடிப்பதை காண கூடிய பொதுமக்கள்!
