ஒருவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது உடலை தகனம் செய்துவிட்டு, 15 நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தால் எப்படி இருக்கும்? பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் நடந்த இந்த சம்பவம், அந்த குடும்பத்தினரை ஒரே நேரத்தில் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. கபூர்தலாவைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தையும் சகோதரரும் பல இடங்களில் தேடியும் ரவிக்குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.