2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TV9 Tamil இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் அனைத்து ஊழலும் விசாரிக்கப்படும் – காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..
எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாகம் காரைக்குடியில் மக்களை சங்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பழமையான பாரம்பரியமிக்க வீடுகளைக் கொண்டது காரைக்குடி. இந்த காரைக்குடியிலும் ஊழல் நிறைந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த பின் இதற்கெல்லாம் விசாரணை மற்றும் தீர்வு காணப்படும். மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஒப்புதல் இல்லாமலேயே தன்னிச்சையாக செயல்பட்டு 30 கோடி ரூபாய்க்கு வேலை நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் எல்லா ஊழலும் முறைப்படி விசாரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 7:29 pm
உதம்பூரில் தொடரும் கனமழை.. டவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உதம்பூரில் இருக்கும் டவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் மேலே அமைந்திருக்கும் பாலம் வழியாக ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 7:19 pm
நாக பஞ்சமி.. கர்நாடகாவின் நாக தேவதா கோவிலில் திரண்ட பக்தர்கள்..
கர்நாடகாவின் கலபுராகியில், ஜூலை 29, 2025 செவ்வாய்க்கிழமை, பக்தர்கள் நாக பஞ்சமியை முன்னிட்டு நாக தேவதா கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டாடினார்கள். இந்த நாள் பாம்புகள் மற்றும் நாக தெய்வங்களை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுகிறது. கோயில்கள், வீடுகள் மற்றும் புனித எறும்புப் புற்றுகளில் மக்கள் பூக்களை வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யதனர். நாக பஞ்சமி என்பது வேத மற்றும் புராண மரபுகளில் வேரூன்றிய ஒரு இந்து பண்டிகையாகும், இந்த நாளில் பக்தர்கள் ஆரோக்கியம், கருவுறுதல், பாதுகாப்பு மற்றும் ஆன்மீக செழிப்புக்காக ஆசீர்வாதங்களை நாடுகின்றனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 7:03 pm
ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?
PM Modi Visit To Tamil Nadu: பிரதமர் மோடி 2025, ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இதில் முக்கியமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து அங்கிருந்து மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நேரலையில் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 1:19 pm
எங்களிடம் அழுவதற்கு கண்ணீரே இல்லை.. அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பின் நிகிதா பேட்டி..
Ajith Kumar Custodial Death Case: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பாக பேசிய நிகிதா, என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவரையே குற்றம் சாட்டி திசை திருப்ப பார்க்கிறார்கள். இறந்து போனது வேதனையான விஷயம்தான் என தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 11:41 am
ஆடிப்பெருக்கு, வார இறுதி நாட்கள்.. 1,090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
Special Buses: ஆடி கிருத்திகை மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு (2025, ஆகஸ்ட் 1,2 மற்றும் 3 ஆம் தேதி) சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக 1,090 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 10:56 am
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை..
Russia Earthquake: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பசிபிக் தீவுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான நிலநடுகத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 8:29 am
தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
Edappadi Palanisamy Condemns CM MK Stalin: திருநெல்வேலியில் மென்பொருள் பணியாளர் கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 6:57 am
இஸ்ரோ நாசாவின் கூட்டு முயற்சி.. இன்று விண்ணில் பாயும் நிசார் செயற்கைக்கோள்..
NISAR Satellite: இந்தியா மற்றும் நாசாவின் முதல் கூட்டு முயற்சியான நிசார் செயற்கைக்கோள் இன்று அதாவது ஜூலை 30, 2025 அன்று மாலை 5.40 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று (ஜூலை 29, 2025) பிற்பகல் தொடங்கியது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 7:58 am
உறுப்பினர் சேர்க்கைகான புதிய செயலி.. இன்று நடக்கும் த.வெ.கவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
TVK District Secretaries Meeting: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ஜூலை 30, 2025 தேதியான இன்று நடைபெறுகிறது. இதில் முக்கியமாக உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை அறிமுகம் செய்கிறார் தலைவர் விஜய். மேலும் இந்த செயலிக்கான பயிற்சியையும் நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 30, 2025
- 6:10 am
அரிவாளால் போலீசாரை தாக்க முயன்ற 17 வயது சிறுவன்.. தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்..
Tirunelveli Crime News: இரு தரப்பு மோதலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார் மீது 17 வயது சிறுவன் அரிவாளால் தாக்க முயற்சி செய்ததன் காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மற்றும் தற்காப்புக்காக போலீசார் சிறுவனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 29, 2025
- 2:04 pm
திருநெல்வேலி கவின்குமார் ஆணவப்படுகொலை.. போலீஸ் தம்பதி மீது வழக்குப்பதிவு..
Tirunelveli Crime News: பட்டியலின இளைஞர் தனது அக்காளை காதலித்து வந்ததன் காரணமாக தம்பி சுர்ஜித் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jul 29, 2025
- 12:32 pm