திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை! – முதல்வர் ஸ்டாலின்
Tamil Nadu CM MK Stalin: இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்; உதயசூரியன் உதிக்கட்டும்” என குறிப்பிட்டு, “#வாக்களியுங்கள்_திமுகவிற்கு” என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
சென்னை, மார்ச் 16, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திமுகவைப் பொருத்தவரையில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்; உதயசூரியன் உதிக்கட்டும்” என குறிப்பிட்டு, “#வாக்களியுங்கள்_திமுகவிற்கு” என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
நெருங்கும் தேர்தல்:
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: விளாத்திகுளம் விஷயத்தில் ஏன் இவ்வளவு மெத்தனம்? முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டிய நடிகை கவுதமி..
திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட மொத்தம் 21 கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 16, 2026 அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயராது உழைப்போம் – முதல்வர் ஸ்டாலின் பதிவு:
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
💪 அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான்… pic.twitter.com/5lpTdNenrL
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 16, 2026
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்! இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்! அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க. ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம். #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண், உறக்கம் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.