AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யின் சிறப்பு ( அரசியல்) அதிகாரியாக பிரபல ஜோதிடர் நியமனம்!

Ricky Radhan Pandit vettrivel : தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ( அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ளார். இவருக்கு வழங்கப்பட்டது அரசுப் பதவியாகும்.

முதல்வர் விஜய்யின் சிறப்பு ( அரசியல்) அதிகாரியாக பிரபல ஜோதிடர் நியமனம்!
ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 May 2026 14:07 PM IST

தமிழக முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ( அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பிரபல ஜோதிடராகவும், தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான உத்தரவை முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் புதிய அதிகாரிகளை நியமனம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதல்வர் பொறுப்பேற்ற நாளில் அவரது முதன்மைச் செயலாளர் 1,2 ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதே போல, முந்தைய நாளில் அவரது அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய சுமார் 14 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

அரசியல் சார்ந்த பணியில் ரிக்கி ரத்தன் நியமனம்

இந்த நிலையில், முதல்வர் விஜயின் நெருங்கிய வட்டாரத்தில் நம்பக்கூடிய நபராக இருக்க கூடிய ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல் அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிக்கி ரத்தன் பண்டிட் முதல்வர் விஜயுடன் செல்பவராகவும், முதல்வர் பங்கேற்கும் நிகழச்சிகளில் அவருக்கான பேச்சுகள் அவரிடம் வழங்கப்பட்டு படித்து விட்டு முதல்வரிடம் வழங்கும் பணியை மேற்கோள்வார்.

விஜய் – ரிக்கி ரத்தன் இடையே 7 ஆண்டு கால பழக்கம்

இதுபோன்ற முக்கிய பணிகளை சிறப்பு அதிகாரி மேற்கொள்வார். தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் சார்ந்த நபரை அரசியல் சார்ந்த பணிகளில் நியமனம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த பணியானது ரிக்கி ரத்தன் பண்டிட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆகியோருக்கு இடையே சுமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தனிப்பட்ட முறையில் பழக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் விஜய் நம்பக்கூடிய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவராக ரிக்கி ரத்தன் பண்டிட் இருந்து வருகிறார்.

Ricky Radhan Pandit Vettrivel

முதல்வர் சிறப்பு அதிகாரி நியமனம்

யார் இந்த ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றி வேல்

இதில், விஜயின் நெருங்கிய நண்பராக விஷ்ணு ரெட்டி என்பவர் இருந்து வருகிறார். அவரிடம் அரசியல் சார்ந்த அனைத்து முடிவுகளிலும் விஷ்ணு ரெட்டியின் பின்புறம் என்பது இருந்து வருகிறது. கட்சி சார்ந்து எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் முக்கிய நபராகவும் ரிக்கி ரத்தன் இருந்து வருகிறார். அதன் அடிப்படையிலேயே, தற்போது அவருக்கு முதல்வரின் சிறப்பு அதிகாரி (அரசியல்) என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு அரசு பதவி ஆகும்.

Follow Us