AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி சிறுமி மாயமாகி 30 நாளாகிறது.. தவெக அரசு என்ன செய்கிறது.. கனிமொழி எம்.பி.எழுப்பிய கேள்வி!

Kanimozhi Questions About Girl Missing : செஞ்சி சிறுமி காணாமல் போய் 30 நாள்கள் ஆகும் நிலையில், தற்போது வரை அந்த சிறுமி குறித்த தகவலோ, மீட்கவோ இல்லை என்றும், தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.

செஞ்சி சிறுமி மாயமாகி 30 நாளாகிறது.. தவெக அரசு என்ன செய்கிறது.. கனிமொழி எம்.பி.எழுப்பிய கேள்வி!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Nov 2026 21:04 PM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி காணாமல் போனார். இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் ஒரு மாத காலம் ஆகும் நிலையில், தற்போது வரை இந்த வழக்கில் துப்பு துலங்காமல் உள்ளது. இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளரும், எம். பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாள்கள் கடந்துள்ளன. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டும் சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை. அவரும் மீட்கப்படவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் பகுதியில் மற்றொரு சிறுமி கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது

தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்து 6 மாதங்கள் ஆகியும் சிறிதும் பொறுப்பு இல்லாத இந்த அரசின் ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. தற்போது, குழந்தை கடத்தல் சம்பவமும் அதிகரித்துள்ளது. செஞ்சியில் காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், தவெக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். செஞ்சியில் வசித்து வரும் வடிவேலு, பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா. இவர், கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி இரவு காணாமல் போனார்.

மேலும் படிக்க: Part Time முதல்வர்.. Full Time கண்டன்ட் கிரியேட்டர்.. ஜோசப் விஜய்க்கு பொறுப்பே இல்லை.. ரவுண்டு கட்டி விளாசிய மு.க.ஸ்டாலின்!

சிபிசிஐடி போலீஸ் விசாரணையிலும் துப்பு துலங்கவில்லை

வீட்டில் தனது தந்தை, தாய் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், துப்பு துலங்காத காரணத்தால் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிசிஐடி போலீஸார் விசாரணையும் தொடங்கப்பட்டு 20 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

சிறுமி காணமல் போனது குறித்து தீவிர விசாரணை

இதனிடையே, சிறுமி காணாமல் போன நாளில் அந்தப் பகுதியில் உள்ள 2 செல்போன் டவர்களில் பதிவான செல்போன் அழைப்புகளை மேற்கொண்ட சுமார் 600 பேரிடமும், சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், நாமக்கல்லில் சிறுமி இருந்ததாக தகவல் வெளியான நிலையில் தனிப்படை அங்கு விரைந்திருந்தது. ஆனால், தற்போது வரை சிறுமி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க: தவெக 6 மாத ஆட்சியில் 50 கொலைகள்.. விஜய் அரசுக்கான கெடு நிறைவு.. போராட்டங்களில் குதிக்கும் பாஜக.. நயினார் நாகேந்திரன்!

Follow Us