AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் கூட்டணி படத்தின் டைட்டில் இதுவா? – வைரலாகும் தகவல்!

Allu Arjun and Lokesh Kanagarajs Collaboration: தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிவருகிறது. இவர் தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த கூட்டணி திரைப்படத்தின் கதை மற்றும் டைட்டில் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் கூட்டணி படத்தின் டைட்டில் இதுவா? – வைரலாகும் தகவல்!
அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 10 Nov 2026 21:42 PM IST

கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், டிசி (DC Movie) என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், இப்படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர், தெலுங்கு நட்சத்திரம் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) 22வது திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் அப்டேட் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலே வெளியான நிலையில், இன்றளவிலும் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. ஆனால் இப்பரத்தின் பின்னணி பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கதையின் ஜானர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நான் ராம் சரண் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் ரிஷிகாந்த் விளக்கம்

அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி படத்தின் டைட்டில் அப்டேட்:

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது, இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுவரும் ராக்கா என்ற திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் நிலையில், இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் தனது 22வது படத்தில் இணைகிறார்.

இதையும் படிங்க: மீண்டும் இணையும் விஷால் – பி.எஸ்.மித்திரன்? வைரலாகும் தகவல்

இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளதாம். அந்த விதத்தில் இப்படத்துக்கு கேங் ஸ்டார் என டைட்டில் வைக்கப்படவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள வெளியாகிவருகிறது. இது அதிரடி ஆக்ஷன் கேங்ஸ்டர்கள் கதைக்களமாக உருவாக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் அப்டேட்டுகளும் வெளியாகவும் என கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி படம் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாக்கப்படவுள்ள இப்படம் தற்காலிகமாக AA23 என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக, தமிழ் நடிகர் ஒருவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை என்ற நிலையில், எப்போது தொடங்கும் என மக்கள் எதிர்பார்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 டிசம்பர் அல்லது 2027ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us