AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீண்டும் இணையும் விஷால் – பி.எஸ்.மித்திரன்? வைரலாகும் தகவல்

Vishal and PS Mithran Movie Update Here | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

மீண்டும் இணையும் விஷால் – பி.எஸ்.மித்திரன்? வைரலாகும் தகவல்
இரும்புத்திரை 2 படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 14:50 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியாக இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சர்தார் 2. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற தவறியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தோல்வியை சந்தித்தது பெருத்த ஏமாற்றத்தைப் படக்குழுவிற்கு அளித்தது. இந்த நிலையில் அடுத்தப் படமே இயக்குநர் பி.எஸ்.மித்திரன் ஹிட் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் பி.எஸ். மித்திரன் எந்தப் படத்தை எந்த நடிகருடன் இணைந்து செய்ய உள்ளார் என்பது குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அவர் மீண்டும் ஒரு பார்ட் 2 படத்தை இயக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மீண்டும் இணையும் விஷால் – பி.எஸ்.மித்திரன்?

அதன்படி தற்போது வெளியான தகவலின்படி, மற்றொரு சிறப்பான திரைக்கதையுடன் ஒரு வலுவான மறுபிரவேசத்தை வழங்கும் நோக்கில், விஷாலும் பி.எஸ். மித்ரனும் இரும்புத் திரை 2 படத்திற்காக மீண்டும் இணையக்கூடும். இப்படம் 2027-ல் படப்பிடிப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளது. சர்தார் 2 நேர்காணல்களின் போது, ​​பி.எஸ். மித்ரன் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். முதல் பாகம் இணையக் குற்றங்களை மையமாகக் கொண்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் செயற்கை நுண்ணறிவை (AI) ஆராயும் என்று கூறப்படுகிறது.

நான் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு இரும்புத் திரை 2 திரைக்கதையை உருவாக்கத் தொடங்கிவிட்டேன். செயற்கை நுண்ணறிவு மற்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஹேக் செய்யத் தொடங்கியுள்ளதாக செய்திகளைப் பார்த்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு செயற்கை நுண்ணறிவால் மாயத்தோற்றங்களை உருவாக்க முடியும், அது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… ஜூனியர் பிக் பாஸாக வினோத்.. அவரின் இடத்தை மாற்ற துடிக்கும் சாதிகா – லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லெஜெண்ட் சரவணனின் புதுப் பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்

Follow Us