இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!
Cuddalore Crime : கடலூர் மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்காக இளைஞரை அழைத்து செல்ல முயன்ற காவல் ஆய்வாளரின் சட்டை காலரை பிடித்து இழுத்து சென்ற சம்பவத்தில் இளைஞர் உள்பட 3 பேரை நெல்லிக்குப்பம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஒரு இளைஞரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்ற காவல் ஆய்வாளரின் சட்டை காலரை பிடித்து அந்த இளைஞர் இழுத்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல்பட்டாம்பாக்கத்தில் குளத்துமேட்டு தெருவில் குடும்ப தகராறு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக ஒரு இளைஞரை போலீசார் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, அந்த இளைஞர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், அந்த இளைஞரை காவல் ஆய்வாளர் வேலுமணி பிடித்து அழைத்து செல்ல முயன்றார். அப்போது, திடீரென அந்த இளைஞர் ஆய்வாளரின் காலரை பிடித்து இழுத்து சென்றார்.
இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்த இளைஞர்
இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, மேலும் சில காவலர்கள் இணைந்து அந்த இளைஞரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனிடையே, அந்த இளைஞர் தாக்கியதில் காவல் ஆய்வாளர் வேலுமணி, சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.




மேலும் படிக்க: “ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை!”.. தவெக எம்எல்ஏ-வை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்!!
இளைஞர் உள்பட 3 பேர் அதிரடி கைது
இதைத் தொடர்ந்து, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த புகழ் ( 23 வயது), ஹரிஹரன் ( 26 வயது), ஜெகதீஷ் ( 23 வயது) ஆகிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழகத்தில் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் உங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கடலூரில் காவல் ஆய்வாளருக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் ஆய்வாளர் வேலுமணி அவர்களின் சீருடையை பிடித்து மல்லுக்கட்டும் இளைஞர்…
காவலர்களுக்கே இந்த நிலமைன்னா.. பொதுமக்கள் நிலமை??? https://t.co/KTX8X01Fex
— U2 Brutus (@U2Brutus_off) November 10, 2026
போலீசாரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
பொதுமக்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும் வெற்றி வரும் நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் நபர்களிடம் இருந்து காவல் அதிகாரிகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது போலீசாரின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாருக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.