AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நவ.13ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை அப்டேட் இதோ..

Tamil Nadu Rain Alert: ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.13ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை அப்டேட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Nov 2026 14:44 PM IST

நவம்பர் 10, 2026: தமிழகத்தில் வரும் நவம்பர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 1.5 கி.மீ. உயரத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 0.9 கி.மீ. உயரத்திலும் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக நவம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை:

நவம்பர் 10: ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 11: சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: “ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை!”.. தவெக எம்எல்ஏ-வை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்!!

நவம்பர் 12: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:

நவம்பர் 13: கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 14: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: அடிதடி,பாலியல் தொல்லை,கட்டப்பஞ்சாயத்து.. அதிகரிக்கும் தவெக எம்எல்ஏக்களின் அட்ராசிட்டி.. சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் வரை பாதிப்பு.. உதயநிதி அட்டாக்!

நவம்பர் 15: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 16: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 10), நாளை (நவம்பர் 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us