AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்திலிருந்து வெளியானது கிளிம்ஸ் வீடியோ

Appa Kutty Movie Glimpse Video | நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அப்பா குட்டி. இந்தப் படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்திலிருந்து வெளியானது கிளிம்ஸ் வீடியோ
அப்பா குட்டி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 15:29 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல ஹிட் படங்களில் இசையமைத்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). தொடர்ந்து இசையமைப்பாளராக பல சாதனைகளைப் படைத்த அவர் தற்போது நாயகனாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளர் மற்றும் நாயகனாக மட்டும் இன்றி படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் இறுதியாக தமிழ் சினிமாவில் தயாரித்து நடித்தப் படம் நூறு சாமி. இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் என்பது சுவாசிகாதான் என்றாலும் இரண்டாம் பாதியில்தான் விஜய் ஆண்டனி வருவார். பாதிப் படம்தான் இவர் நடித்து இருந்தாலும் இவரது நடிப்பினை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் அப்பா குட்டி.

அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த அப்பா குட்டி படத்தை இயக்குநர் மு மாறன் எழுதி இயக்கி உள்ளார். உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி ஆஸ்ராணி, பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார், அருவி மாதன், ஜென்சன் திவாகர், முருகானந்தம், ஸ்ரீஜா ரவி, பிரவீனா, சித்ரா லட்சுமணன், ஹரி பிரியா இசை, ஹரி பிரியா, குமார் நடராஜன், சுவாமிநாதன், பேபி லிதன்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்பாகுட்டி படத்திலிருந்து வெளியானது கிளிம்ஸ் வீடியோ:

இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த அப்பா குட்டி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.

Also Read… சூர்யாவின் 49வது படத்தின் கதை இப்படியா இருக்கும்? டைட்டில் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள டோரதி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us