AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லெஜெண்ட் சரவணனின் புதுப் பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்

Legend Saravanan New Movie Director Update Here | தமிழ் நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் நடிகர் லெஜெண்ட் சரவணன். இவரது அடுத்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லெஜெண்ட் சரவணனின் புதுப் பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்
லெஜெண்ட் சரவணன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2026 17:24 PM IST

சினிமாவில் பிரபலங்களாக உள்ள வாரிசு நடிகர்கள் ஒரு பக்கம் தொடர்ந்து படங்களில் அறிமுகம் ஆகி வருவது போல தமிழ் நாட்டில் மிகப் பெரிய தொழிலதிபர்களாகவும், ஜாம்பவன்களாகவும் இருப்பவர்கள் தொடர்ந்து படங்களில் நாயகன்களாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மிகப்பெரிய சமையல் கலைஞராக இந்தியாவில் பல பிரபலங்களில் வீட்டு விசேசங்களில் சமைத்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு சில படங்களில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வரிசையில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ள சரவணன் சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்துள்ளார். தனது 50 வயதிற்கு மேல் அவர் இந்த ஆசையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சரவணின் முதல் படம் தான் லெஜெண்ட். இந்தப் படத்தில் ஒரு சயிண்டிஸ்டாக அவர் நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சரவணன் நடிப்பில் இரண்டாவதாக தமிழ் சினிமாவில் வெளியான படம் லீடர். இந்தப் படத்தில் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து இருந்தார் சரவணன். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

லெஜெண்ட் சரவணனின் புதுப் பட இயக்குநர் இவரா?

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மான் கராத்தே படத்தை இயக்கிய கிறிஸ் திருகுமரனுடன் அவர் இணையவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லெஜண்ட் சரவணன் மூன்று வெவ்வேறு வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் டிமாண்டி காலனி 3 படம் – வெளியானது அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தியேட்டரில் 25 நாட்களைக் கடந்தது ஜெயிலர் 2 படம்… கொண்டாட்டத்தில் படக்குழு

Follow Us