AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் டிமாண்டி காலனி 3 படம் – வெளியானது அப்டேட்!

Demonte Colony 3 Movie Release Date Out Now | நடிகர் அருள் நிதி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் டிமாண்டி காலனி 3. இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் டிமாண்டி காலனி 3 படம் – வெளியானது அப்டேட்!
டிமாண்டி காலனி 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Nov 2026 11:34 AM IST

தமிழ் நாட்டில் மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அரசியலுக்குள் நுழையாமல் சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக நாயகனாக நடிக்கத் தொடங்கினார் அருள் நிதி (Actor Arul Nidhi). இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் வம்சம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி வந்தார் நடிகர் அருள் நிதி. அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் அருள் நிதி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அருள் நிதி நடிப்பில் முன்னதாக வெளியான டிமாண்டி காலனி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாகமும் உருவாகி உள்ளது. முன்பு இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்துதான் இந்த டிமாண்டி காலனி 3 படத்தையும் எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் டிமாண்டி காலனி 3 படம்:

மேலும் டிமாண்டி காலனி 3 படத்தில் நடிகர் அருள் நிதி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி இந்தப் படத்தில் நடிகர்கள் பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் குரு சோமசுந்தரம் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த டிமாண்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு முன்பே முடிவடைந்த நிலையில் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி இந்தப் படம் வருகின்ற 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஓம் பட இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசிய மம்முட்டி – வைரலாகும் வீடியோ

டிமாண்டி காலனி 3 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு!

Follow Us