AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் டாஸ்க்கைவிட சாப்பாட்டு சண்டைதான் அதிகமா இருக்கு… இப்போ யார் சண்டை போட்டுகிட்டா தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்களிடையே உணவு தொடர்பான சண்டைகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இன்றும் அது தொடர்பான சண்டை ஏற்பட்டுள்ள வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸில் டாஸ்க்கைவிட சாப்பாட்டு சண்டைதான் அதிகமா இருக்கு… இப்போ யார் சண்டை போட்டுகிட்டா தெரியுமா? வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2026 12:59 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் தொடங்கப்பட்டதில் இருந்து முதல் சீசன் முதல் தற்போது 10-வது சீசன் (Bigg Boss Tamil Season 10) வரை போட்டியாளர்களிடையே காமனாக உள்ள சண்டை என்றால் அது உணவு சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் போதிய அளவில் இல்லாமல் அவர்கள் வெற்றிப் பெறும் அளவிற்கு மட்டுமே உணவு பொருட்கள் வீட்டிற்குள் அனுப்பப்படும். இருக்கும் பொருட்களை வைத்து அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவை சமைத்து சாப்பிட வேண்டும். இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் பிரிக்கும் போதே சண்டைகள் தொடங்கிவிடும். எனக்கு அளவு குறைவாக உள்ளது அவருக்கு அளவு அதிகமாக உள்ளது என்று. அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டிற்குள் நினைத்ததை நினைத்த நேரம் சாப்பிட முடியாது என்பதால் உணவு பற்றாக்குறையும் இருக்கும்.

போதிய உணவு கிடைக்காத போது போட்டியாளர்கள் இடையே சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அதிக அளவில் போட்டியாளர்களிடையே சண்டை என்பது டாஸ்கின் போது நடைப்பெற்றதைவிட உணவு காரணமாகவே சண்டை நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் டாஸ்க்கைவிட சாப்பாட்டு சண்டைதான் அதிகமா இருக்கு:

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் கூட டாஸ்குகள் அதிகமாக காட்டப்பட்டதைவிட போட்டியாளர்கள் சாப்பாட்டு விசயத்தில் சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள் தான் அதிக அளவில் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ விடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் தனக்கு உப்பு காரம் போட்ட உணவு வேண்டும் என்று முனியம்மாள் கேட்க அதற்கு கொடுக்க முடியாது என்று தன்யா கூறுகிறார். இதனைத் தொடர்ந்து முனியம்மாள் பிரின்சிபலாக உள்ள அஸ்மிதாவிடம் புகார் அளிக்க அப்போதும் தன்யா கொடுக்க முடியாது என்று வாதம் செய்கிறார். இந்த பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அடாவடியாக நடந்துகொள்ளும் முனியம்மாள் இதுவரை கண்கலங்கியது என்றால் அது உணவுக்காகதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… Sai Abhyankkar: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பர்த்டே பாய் சாய் அபயங்கர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sreeleela: ரோஜாவாக ஸ்ரீலீலா… ஓம் படத்திலிருந்து ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ!

Follow Us