AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அது ஒரு ஆணாதிக்கச் சூழலாக எனக்குத் தோன்றியது… தெலுங்கு படம் குறித்து வெளிப்படையாக பேசிய ராதிகா ஆப்தே – வைரலாகும் வீடியோ!

Actress Radhika Apte talks about telugu movie | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவில் நடித்தது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அது ஒரு ஆணாதிக்கச் சூழலாக எனக்குத் தோன்றியது… தெலுங்கு படம் குறித்து வெளிப்படையாக பேசிய ராதிகா ஆப்தே – வைரலாகும் வீடியோ!
ராதிகா ஆப்தேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2026 09:00 AM IST

பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே (Actress Radhika Apte). இவர் கடந்த 2005-ம் ஆண்டு இந்தி சினிமாவில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஐசி என்ற படத்தின் மூலம் நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். இந்தியாவில் உள்ள பல மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி ஓடிடியிலும் இணையதள தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. அதன்படி சமீபத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ள தொடர் அக்கா. இந்த தொடரின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகை ராதிகா ஆப்தேவின் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அது ஒரு ஆணாதிக்கச் சூழலாக எனக்குத் தோன்றியது:

அதன்படி அந்தப் பேட்டியில் நடிகை ராதிகா ஆப்தே பேசியதாவது, நான் நடித்த ஒரு தெலுங்குத் திரைப்படத்தில், என் மாமாவை திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழல் இருந்தது. அதுதான் எனக்கு மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது. அந்தச் சூழலின் ஒவ்வொரு அம்சமும் எனக்குப் பிடிக்கவில்லை. என்னை விட வயதில் மிகவும் மூத்த ஒரு நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. அது ஒரு ஆணாதிக்கச் சூழலாக எனக்குத் தோன்றியது. அதுதான் எனக்கு மிகவும் கடினமான விஷயமாக இருந்தது என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் அஸ்மிதா – ஜேசனுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்… வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் சத்யவான் சாவித்திரி படத்திலிருந்து சக்கரை பெண்ணே பாடல்!

Follow Us