AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனது கெரியரில் பெஸ்ட் பாடல்.. அதை பைக்கில் போகும்போதுதான் கம்போஸ் பண்ணேன் – ஜி.வி.பிரகாஷ் குமார்!

GV Prakash About Bike composition story: தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் பல படங்கள் தொடர்ந்து உருவாகிவருகிறது. முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய அவர். தனது கேரியரில் பேஸ்ட் பாடல் ஒன்றை பைக்கில் செல்லும்போது கம்போஸ் செய்ததாக தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

எனது கெரியரில் பெஸ்ட் பாடல்.. அதை பைக்கில் போகும்போதுதான் கம்போஸ் பண்ணேன் – ஜி.வி.பிரகாஷ் குமார்!
ஜி.வி.பிரகாஷ் குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 05 Nov 2026 08:31 AM IST

தென்னிந்திய மொழிகளில் இசையமைப்பாளராக மிகவும் பிரசித்திப் பெற்றவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக பிரபலம் பெற்றிருந்தாலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. இவர் சினிமாவில் நடிகராக மற்றும் இசையமைப்பாளராக தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இம்மார்ட்டல் (Immortal Movie) இந்த படத்தில் கயாடு லோஹருடன் இணைந்து நடித்திருந்த நிலையில், படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு பிறகு புதிய திரைப்படங்களில் பணியாற்றியும் வருகிறார். முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஜி.வி.பிரகாஷ் தனது வாழ்க்கையிலே சிறந்த பாடலை பைக்கில் செல்லும்போதுதான் கம்போஸ் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அது எந்த பாடல் என்பது குறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: ஆர்யா எப்போதுமே அப்படிதான்.. காமெடியாக ஜீவா பகிர்ந்த விஷயம்!

தனது கேரியரில் பேஸ்ட் பாடலை பைக்கில் செல்லும்போது கம்போஸ் செய்தது பற்றி ஜி.வி. பிரகாஷ்:

அந்த நேர்காணலில் பேசும்போது ஜி.வி. பிரகாஷ், “மதராசபட்டினம் படத்தில் ஒரு பாடல் மிகவும் இனிமையாக இருக்கும். அது அனைவருக்கும் தெரியும் எந்த பாடல் என்று. மதராசபட்டினம் படத்தின் கான்சப்ட்-ஐ இயக்குநர் விஜய் சொல்லிட்டு போய்ட்டாரு. அந்த படத்திற்கான பாடல் இசையமைக்கும் பணியில் நான் இருந்தேன். அப்போது எனது நண்பர்களுடன் பைக்கில் சென்றேன். பொதுவாகவே எனக்கு பைக்கில் செல்வது மிகவும் பிடிக்கும்.

இதையும் படிங்க: எனது வாழ்நாள் முழுக்க தெலுங்கு சினிமாவுக்கு அதற்காக நன்றியோடு இருப்பேன் – ஸ்ருதிஹாசன்!

அப்படி நான் எனது நண்பருடன் பைக்கில் செல்லும்போதுதான் ஒரு பாடலை கம்போஸ் செய்தேன். அந்த பாடல்தான் எனது கேரியரில் சிறந்த பாடல்களில் ஒன்று என சொல்லலாம். அந்த பாடல்தான் பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடல். அந்த பாடலை ருகுமார் ரத்தோர், ஹரிணி மற்றும் நான் இணைந்து பாடியிருந்தோம். அந்த பாடலைத்தான் நான் பைக்கில் செல்லும்போது கம்போஸ் செய்தேன்” என அதில் அவர் கூறியிருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash)

இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். மேலும் நடிகராக செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற திரைப்படம் மற்றும் ஜோ பட இயக்குநரின் இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் அவர் நடித்துவருகிறார். இந்த படங்கள் பேக் டூ பேக் 2027ம் ஆண்டில் வெளியாக தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us