Jiiva: ஆர்யா எப்போதுமே அப்படிதான்.. காமெடியாக ஜீவா பகிர்ந்த விஷயம்!
Jiiva About Arya: தமிழில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் ஜீவா. இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய ஜீவா, நடிகர் ஆர்யாவின் குணம் மற்றும் அவருடனான நகைச்சுவை சம்பவத்தை ஓபனாக பகிர்ந்திருந்தார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
நடிகர் ஜீவா (Jiiva) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் (R.P. Choudhary) மகனாக இவர், தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான திரைப்படத்தின் மூலமாகவே தமிழில் ஹீரோவாக நுழைந்தார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை கிட்டத்தய 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில் (Thalaivar Thambi Thalaimaiyil). இந்த படத்தை மலையாள இயக்குநர் இயக்கியிருந்த நிலையில், 2026 ஜனவரியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் புது புது படங்களில், அறிமுக இயக்குனர்களுடன் இணைந்துள்ளார்.
இவரின் நடிப்பில் சிறப்பாக பல படங்கள் இந்த 2026ம் ஆண்டில் பேக் டூ பேக் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஜீவா, நடிகர் ஆர்யாவின் (Actor Arya) குணம் மற்றும் அவரின் டைமிங் காமெடி குறித்து நகைச்சுவையாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: இஞ்சி வெல்லம் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
நடிகர் ஆர்யாவின் சேட்டைகள் குறித்து ஓபனாக கூறிய ஜீவா:
அண்ட் நேர்காணலில் ஜீவாவிடம், சீரியஸான நேரத்தில் காமெடி செய்யும் உங்கள் நண்பன் யார் ? என கேள்வி கேட்டிருந்தார். உடனே ஜீவா, ஆர்யாதான். ஒருமுறை செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியின்போது, எங்கள் டீம் கேப்டனாக ஆர்யாதான் டாஸ் போட போயிருந்தாரு. நாங்க முதலில் முடிவு செய்தோம், எதிர் அணியை பேட்டிங் செய்ய வைக்கலாம், நம்ம பீல்டிங் இருக்கலாம் என பிளான் போட்டோம்.
இதையும் படிங்க: அதனால்தான் எனக்கு பிரச்சனையே.. நயன்தாரா பகிர்ந்த விஷயம்!
ஆனால் டாஸ் போடா போன ஆர்யா, பீல்டிங் இல்லாமல் பேட்டிங் என சொல்லிட்டு வந்துட்டாரு. என் என்று அவரிடம் கேட்டால், வெயில் அதிகமாக இருக்கு யாரு பீல்டரிங்லாம் போய் நிப்பா என சொல்லுறாரு” என அவரின் காமெடியான சம்பவம் குறித்த அவர் அதில் பேசியிருந்தார்.
நடிகர் ஜீவாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் குறித்த பதிவு:
View this post on Instagram
நடிகர் ஜீவா தனது கைவசத்தில் கிட்டத்தட்ட 3 படங்களை வைத்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக தலைவர் தம்பி தலைமையில் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. அதன் பிறகு இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படத்தில் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும்.
இதையடுத்து இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் தகப்பன் என்ற படத்தில் நடித்துவந்தார். இப்படம் 2026 டிசம்பர் 4ம் தேதியில் வெளியாகிறது. மேலும் இதற்க்கு பின் மலையாள நடிகர் முஸ்தஃபா இயக்கத்தில் ஜீவா49 என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது 2027 இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.