Trisha: நான் இந்த நிலையில் இருக்க காரணம் அந்த முதல் வெற்றிதான் – திரிஷா ஓபன் டாக்!
Trisha Krishnan on Her First victory: தென்னிந்திய திரைத்துறையில் மிகவும் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில், தென்னிந்திய மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளது. முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிஷா தனது முதல் வெற்றி குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளது. மிஸ் சென்னை என்ற அழகி பட்டத்திற்கு பின்னரே இவர் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இயக்குநர் அமீர் (Ameer) இயக்கத்தில் இவர் நாயகியாக நடித்த முதல் படம் மௌனம் பேசியதே (Mounam Pesiyadhe). இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நாயகியாக நடித்துவருகிறார். தமிழ் சினிமாவில் இவர் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). இப்படத்திலும் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 43வது வயதிலும் நாயகியாகவே நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை திரிஷா, அதில் தனது முதல் வெற்றி மற்றும் தனது நிலைக்கு காரணம் என்பது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய்க்கு பிடித்த திரைப்படங்கள் இதுவா? முதல்வர் விஜய் நடித்த படங்கள் இருக்கா?
தனது முதல் வெற்றி மற்றும் தனது இந்த நிலைக்கான காரணம் குறித்து பேசிய திரிஷா:
முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய திரிஷா, “மிஸ் சென்னை ஆனது எனது முதல் வெற்றி. அந்த போட்டியில் நான் வெற்றிபெற்றிருந்தாலும், அதற்கு முந்தைய நாள் இரவில் நான், அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவரிடம் நான் இதில் பங்கேற்கவில்லை, நான் விலகிவிடுகிறேன் என அவரிடம் சொல்லிவிட்டேன். ஆனால் அவர் என்னை எப்படியோ சம்மதிக்கவைத்து, அதில் பங்கேற்கவைத்துவிட்டார்.
இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படம் புது அடையாளத்தை கொடுத்துள்ளது – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
அந்த நிகழ்ச்சியை வென்ற பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனென்றால் அந்த வெற்றிக்கு பிறகே, நான் மியூசிக் வீடியோ, பேஷன் ஷோ மற்றும் சினிமா போன்ற துறைகள் மற்றும் போட்டிகளில் நுழைய முடிந்தது, நான் இந்த நிலைமையில் இருக்க காரணமும் அதுதான்” என அந்த முதல் வெற்றி குறித்து திரிஷா அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை திரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை திரிஷா கிருஷ்ணன் இறுதியாக கருப்பு என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் இவர் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகிறது. மேலும் மோகன்லாலுடன் இவர் நடித்த ராம் என்ற படம் உருவாகி இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.