AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ashok Selvan: நோ ரோப்.. நோ டூப்.. அன்பில் அவன் படத்திற்காக 70 அடி உயரத்திலிருந்து குதித்தஅசோக் செல்வன் – சூர்யாபகிர்ந்த வீடியோ!

Ashok Selvans Anbil Avan movie: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் அசோக் செல்வன். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் அன்பில் அவன். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்க அசோக் செல்வன் எடுத்த ரிஸ்க் குறித்த வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Ashok Selvan: நோ ரோப்.. நோ டூப்.. அன்பில் அவன் படத்திற்காக 70 அடி உயரத்திலிருந்து குதித்தஅசோக் செல்வன் – சூர்யாபகிர்ந்த வீடியோ!
அசோக் செல்வன் ஸ்டண்ட்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Sep 2026 20:54 PM IST

கோலிவுட் சினிமாவில் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் நடிகர்களில் ஒருவர்தான் அசோக் செல்வன் (Ashok Selvan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் தக் லைஃப் (Thug life). கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் வெளியான இந்த படமானது அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடித்திருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின் அசோக் செல்வனின் நடிப்பில் வெளியாக தயாராகியுள்ள புதிய திரைப்படம்தான் அன்பில் அவன் (Anbil Avan).

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அசோக் செல்வனுடன் குறும்படம் ஒன்றில் பணியாற்றியுள்ளாராம். இவரின் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படம்தான் அன்பில் அவன். இந்த படத்திற்காக எந்தவித பாதுகாப்பு மற்றும் டூப் இல்லாமல் 70வது அடி உயரத்திலிருந்து, ஏரியில் அசோக் குறித்த வீடியோவை நடிகர் சூர்யா பாராட்டி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: டாஸ்கில் லீடர் என்ற அட்வான்டேஜ்.. ஷமாவை வெளுத்துவாங்கிய விஜய் சேதுபதி!

அன்பில் அவன் படத்திற்காக அசோக் செல்வன் எடுத்த ரிஸ்க் :

நடிகர் அசோக் செல்வன் அன்பில் அவன் படத்திற்காக கிட்டத்தட்ட 70வது அடி உயரமுள்ள மலையிலிருந்து ஏரியில் குதிக்கும் காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சிக்காக எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், கயிறு மற்றும் டூப் எதுவும் இல்லாமல் ரிஸ்க் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 70வது அடியிலிருந்து அசோக் செல்வன் குதித்த காட்சியை எவ்வாறு படமாக்கப்பட்டது என்பது பற்றிய வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அடுத்த தலைமுறையினர் அரசியலில் வலுவாக இருக்க விஜய் காரணமாக இருப்பார் – இயக்குநர் அட்லி

அசோக் செல்வன் 70வது அடியிலிருந்து குதித்தது குறித்து சூர்யா வெளியிட்ட பதிவு:

அன்பில் அவன் பட ரிலீஸ் எப்போது:

இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு மெய்யழகன் மற்றும் 96 போன்ற படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு யு/ ஏ தர சென்சார் சான்றிதழை சென்சார் குழு கொடுத்துள்ளது. மேலும் இதன் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us