AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மலையாள சினிமாவில் ஃபேமிலி காமெடி பாணியில் வெளியான இந்த அவராச்சன் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!

Avaraachan And Sons Movie OTT Review Here | மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அவராச்சன் அண்ட் சன்ஸ். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் ஃபேமிலி காமெடி பாணியில் வெளியான இந்த அவராச்சன் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!
அவராச்சன் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 18:35 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அவராச்சன் & சன்ஸ் (Avaraachan And Sons). இந்தப் படத்தை இயக்குநர் தம்பி இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை தம்பி மற்றும் ஜோசப் விஜீஷ் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடி பாணியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் பிஜூ மேனன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, கணபதி எஸ்.பொதுவால், கிரேஸ் ஆண்டனி, அகில பார்கவன், பார்வதி பாபு, ஊர்வசி, வினய் கோட்டை, ஜானி ஆண்டனி, வெட்டுக்கிளி பிரகாஷ், கோட்டயம் நசீர், சாபுமோன் அப்துசமத், பாலி வல்சன் மற்றும் ஷாஜு ஸ்ரீதர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சனல் தேவ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்த அவராச்சன் & சன்ஸ் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஓடிடியில் வெளியான அவராச்சன் & சன்ஸ் படம் எப்படி இருக்கு?

நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, கணபதி ஆகியோரின் தந்தைதான் பிஜூ மேனன். ஸ்ரீநாத் பாசிக்கு திருமணம் ஆகி குழந்தை பிறக்க உள்ள நிலையில் அடுத்தது கணபதி திருமணத்திற்கு தயாராக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பிஜூ மேனன் தனது மகன்களின் வாழ்க்கையில் எந்த அக்கறையும் இல்லாமல் குடித்துவிட்டு ஊர் முழுவதும் பிரச்சனைகளை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்.

Also Read… அனிருத் – காவ்யா மாறனின் காதல் கிசு கிசு முதல் கல்யாணம் வரை…. ஒரு ரீவைண்ட்!

இப்படி இருக்கும் நிலையில் இளைய மகனின் திருமணம் பிஜூ மேனன்னால் தடைப்பட்டு போக அதனை தடுத்த நபரை ஊர் முன்பு அசிங்கப்படுத்துகிறார் பிஜூ மேனன். அதனைத் தொடர்ந்து பிஜூ மேனனை அடிக்க சிலர் வர அவர்களையும் அடித்து ஐசியுவில் அட்மிட் செய்யும் அளவிற்கு ஆக்குறார். இதானால் ஊரைவிட்டு தனது அக்காவின் ஊரில் சென்று தஞ்சம் அடைகிறார்.

அங்கும் பிரச்சனைகள் வரிசையாக வர பிஜூ மேனனை மறுவாழ்வு மையத்தில் சேர்கிறார்கள். அந்த இடத்தில் அவர் தனது மகன்களின் வாழ்க்கைக்கு தான் எதுவும் செய்யவில்லை என்பதை உணர்கிறார். அதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் நலனுக்காக அவர் என்ன எல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… இறுதி செய்யப்படும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்

Follow Us