AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இஞ்சி வெல்லம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை தோற்றங்களா? வைரலாகும் தகவல்

Inji Vellam Movie Update Here | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து பலப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் இஞ்சி வெல்லம் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இஞ்சி வெல்லம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை தோற்றங்களா? வைரலாகும் தகவல்
இஞ்சி வெல்லம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 17:25 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). தொடர்ந்து தமிழ் மொழியில் பிரபல நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி மற்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் மொழியில் மட்டும் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது.

இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து காந்தி டால்க்ஸ் மற்றும் பத்தா என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான பத்தா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இஞ்சி வெல்லம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை தோற்றங்களா?

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் மொழியில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் இஞ்சி வெல்லம். இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 29-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாய் பலல்வி நடித்துள்ளார்.

மேலும் இந்த மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மூன்று வெவ்வேறு தோற்றங்களில் தோன்றவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. சமீபத்தில் இப்படத்தின் ஆரம்பகட்ட தொகுப்பைப் (rough cut) பார்த்த மணிரத்னம், அதன் வெளியீட்டில் மிகுந்த திருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

Also Read… சாதிய மோதல் ஏற்பட வாய்ப்பு… கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிராக காவல்துறையிடம் புகார்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஜேசன் – வினோத் பாபு… வைரலாகும் புரோமோ வீடியோ!

Follow Us