AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஜேசன் – வினோத் பாபு… வைரலாகும் புரோமோ வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 10-வது வாரம் தொடங்கியதில் இருந்து பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்றுகொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய எபிசோடின் முதல் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஜேசன் – வினோத் பாபு… வைரலாகும் புரோமோ வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 10:31 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 9 வாரங்கள் முடிவடைந்து தற்போது 10-வது வாரம் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டு இருக்கின்றது. மொத்தம் 24 போட்டியாளர்களுடன் சென்று கொண்டு இருந்த இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 போட்டி தற்போது 13 போட்டியாளர்களுடன் சென்று கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வார இறுதியில் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இருந்து எவிக்டாகி வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த 10-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. மேலும் பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாக இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிக்பாஸில் குரலே ஒலிக்காமல் சென்று கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலாக வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் பிக்பாஸின் ஜூனியராக தேர்வாகி வீட்டை வழிநடத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக இந்த பிக்பாஸில் ஜூனியர் பிக்பாஸாக வினோத் பாபு தேர்வான நிலையில் அவரின் வழிகாட்டுதல் சரியாக இல்லை என்று கூறி அவரை மாற்றினர். இந்த நிலையில் இரண்டாவதாக தற்போது ஜூனியர் பிக்பாஸாக முனியம்மாள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஜேசன் – வினோத் பாபு:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 66-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த புரோமோ வீடியோவில் நீதிமன்றத்தில் இருக்கும் கூண்டு போல ஒரு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நிற்கும் வினோத் பாபுவிடம் வக்கீல் கோர்ட் அணிந்த சாதிகா கேள்விகளை எழுப்பி வருகிறார். அப்போது வினோத் பாபு மற்றும் ஜேசன் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. அந்த வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் ஜூனியர் பாஸாக வேண்டும் என கேட்கும் ஜேசன்… ஹவுஸ்மேட்கள் எடுத்த முடிவு என்ன – வெளியானது வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சீன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜித்து மாதவன் அடுத்து இயக்கப்போவது யாரை? வைரலாகும் தகவல்

Follow Us