AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: அட அது இல்லையா? ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு ஷாக்!

Jailer 2 Movie OTT Update: கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் பெற்றிருந்த திரைப்படம் ஜெயிலர் 2. இந்த ரிலீஸில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயம் ஓன்று காத்திருக்கிறது. அது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Jailer 2: அட அது இல்லையா? ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு ஷாக்!
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Nov 2026 20:35 PM IST

தென்னிந்திய சினிமாவில் நடிகர்களே கொண்டாடும் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் 172வது திரைப்படமாக கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2 Movie). இந்த திரைப்படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Director Nelson Dilipkumar) இயக்கியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் அமைந்திருந்தது. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருடன் சிவராஜ்குமார் (Shivaraj Kumar), மோகன்லால் (Mohanlal), ஹ்ரித்திக் ரோஷன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் வித்யா பாலன் என பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: இந்த பிராங் நல்லா இல்ல.. ஜூனியர் பிக் பாஸ் கொடுத்த சீக்ரட் டாஸ்க்கால் காண்டான போட்டியாளர்கள்!

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் காத்திருக்கும் அதிர்ச்சி:

ஜெயிலர் 2 திரைப்படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள ஒரு பான் இந்திய திரைப்படமாகும். இந்த படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பான் இந்திய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். அந்த விதத்தில் இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 20 நாட்களை கடந்திருக்கும் நிலையில், அதை ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த கமல்ஹாசன் – வைரலாகும் போட்டோ!

இப்படத்தின் நடிகர்க சந்தானம் நடித்த காட்சி மற்றும் மோகன்லால் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், அது மொத்தமாக நீட்டிக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவ்வாறு வெளியாகாது என தற்போது இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. அமேசான் ப்ரைம் வீடியோவில் 2 மணி நேரம் 43 நிமிடமாகவே ஜெயிலர் 2 படம் வெளியாகிறதாம். வரும் 2026 நவம்பர் 12ம் தேதியில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

இந்த ஜெயிலர் 2 திரைப்படமானது தற்போதும் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் உலகமெங்கும் சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலை பெற்றுள்ள நிலையில், இந்த படம் சிறப்பான வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் நீடிக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன் நெஸ்ட் ஓடிடியிலாவது வெளியாகுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us