Kamal Haasan: சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த கமல்ஹாசன் – வைரலாகும் போட்டோ!
Kamal Haasan Sandiyar Movie: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சண்டியர் என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் இணைந்தது குறித்து புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் நடிகர்களே கொண்டாடி, புகழ்ந்துவரும் நாயகனாக இருந்துவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பிலும், இயக்குநர் மணிரத்தினத்தின் (Director Mani Ratnam) இயக்கத்திலும் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life Movie). இப்படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு இவர் மற்ற இயக்குநர்களுடன் படங்களில் இணைவதாக பேசப்படுவந்தது.
அந்த வரிசையில் தற்போது கமல், சித்தா மற்றும் வீர தீர சூரன் போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் (Director SU Arun Kumar) இயக்கத்தில், சண்டியர் (Sandiyar Movie) என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் தற்போது கமல்ஹாசன் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்ததாக புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: முடிஞ்சா கைய வை.. தன்யாவிடம் கைகலப்பில் ஈடுபட்ட முகேஷ் – பரபரப்பில் பிக் பாஸ் வீடு!
சண்டியர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கமல் இணைந்தது தொடர்பாக வெளியான பதிவு:
Beyond Every Era
Always Ahead of Time#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
@ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent https://t.co/9EYXxnCahP
— Raaj Kamal Films International (@RKFI) November 10, 2026
இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் இயக்கும் இப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இதை தயாரிக்க, தென்னிந்திய சினிமாவில் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் ஆரம்பத்தில் கமல்ஹாசன் x அருண்குமார் திரைப்படம் என அழைக்கப்பட்டுவந்த நிலையில், பின் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டியர் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் நடிப்பில் பேக் டூ பேக் வெளியாக காத்திருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?
இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் மற்றும் எந்நெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கிராமத்து பட பாணியில் இந்த திரைப்படமானது உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் வரும் 2027ம் ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை பற்றிய அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படமானது விருமாண்டி படத்தை போலவே ஒரு கேங்ஸ்டர் படத்தை போல உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படும் நிலையில், கமல்ஹாசனுக்கு இது கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.