AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குடும்பத் தகராறில் எல்லை மீறிய வெறி.. உறவினர் விரலை கடித்து துப்பிய நபர்.. அம்பாசமுத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Ambasamudram Man Arrested : திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் உறவினரை தாக்கி அவரது கை விரலை கடித்து துப்பிய நபரை அம்பாசமுத்திரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறில் எல்லை மீறிய வெறி.. உறவினர் விரலை கடித்து துப்பிய நபர்.. அம்பாசமுத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்!
அம்பாசமுத்திரம் காவல் நிலையம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Nov 2026 17:31 PM IST

திருநெல்வேலி குடும்ப தகராறில் ஒருவரது விரலை கடித்து துப்பிய நபரை அம்பாசமுத்திரம் போலீசார்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது பிரம்மதேசம் கிராமம். இங்கு, செக்கடி தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகன் ஹரிஷ் ( 25 வயது). இதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் தெருவில் ஹரிஷின் அத்தை மகன் கார்த்திக் ( 27 வயது) என்பவர் வசித்து வருகிறார். இவர்களது குடும்பத்தினர் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினர் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று கார்த்திக் தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதை அறிந்த அக்கம், பக்கத்தில் உள்ள வசிப்பவர்கள் மற்றும் ஹரிஷின் தம்பி ரகுராம் ஆகியோர் வேடிக்கை பார்த்துள்ளனர்.

செல்போன் மூலம் உறவினருக்கு கொலை மிரட்டல் விடுப்பு

இதனால், ஆத்திரம் அடைந்த கார்த்திக், ரகுராமின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த ரகுராம் தட்டிக்கேட்டு உள்ளார். இதனால், இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் மோதலாக மாறியுள்ளது. அத்துடன், ரகு ராமுக்கு, கார்த்திக் கொலை மிரட்டல் விடுத்து விட்டு செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ஹரிஷ் ஷங்கர் மற்றும் ரகுராம் அவர்களது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கார்த்திக் திடீரென அவர்களது பெற்றோரை குறிப்பிட்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

மேலும் படிக்க: இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து இழுத்த இளைஞர்.. கடலூரில் பெரும் பரபரப்பு.. 3 பேர் அதிரடி கைது!

ஆத்திரத்தில் கை விரலை கடித்து துப்பிய உறவினர்

இதனை, ஹரிஷ் மற்றும் ரகுராம் ஆகியோர் தட்டி கேட்டு உள்ளனர். இதனால், இருவர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில், கடும் ஆத்திரம் அடைந்த கார்த்திக், ஹரிஷ் சங்கரை கன்னத்தில் பலமாக தாக்கினார். இதனை, தடுக்க வந்த ரகுராமையும் சரமாரியாக தாக்கியதுடன், திடீரென அவரது கை விரலை கடித்து துப்பினார்.

ஒருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

இதில், அவருக்கு ரத்தம் கொட்டிய நிலையில், அக்கம், பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டதுடன், இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தி ஆஜர் படுத்தில் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போனது குத்தமா? 7 பேராசிரியர்கள் வீடுகளில் பல லட்சம் நகை, வெள்ளி கொள்ளை.. திருவாரூரில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்!

Follow Us