சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. நகரில் வலம் வரும் 1000 ஏ.சி. பேருந்துகள்.. ரூ. 500 கோடி ஒதுக்கீடு!
Chennai 1000 AC Buses Purchase : சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1,000 மின்சாதன வசதி உடைய குளிர்சாதனை பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக ரூ. 500 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை போக்குவரத்து கழகத்திற்கு மேலும் 1000 குளிர்சாதன வசதி உடைய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், சென்னை மாநகரத்தில் இயக்குவதற்காக 1000 மின்சார வசதி உடைய குளிர்சாதன பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கும், சென்னை மாநகரத்தில் செயல்பட்டு வரும் பேருந்து பணி மனைகளில் சார்ஜிங் வசதி, பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக என மொத்தம் ரூ. 500 கோடி நிதியை ஒதுக்கி தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பிறப்பித்துள்ளார். இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட்டு 1000 குளிர்சாதன விரைவில் வாங்கப்பட உள்ளன.
சென்னை மாநகரில் 1000 ஏ.சி. பேருந்துகள்
ஏற்கனவே, சென்னை மாநகரில் சுமார் 755 மின்சார வசதி உடைய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சுமார் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி உடைய பேருந்துகள் ஆகும். இந்த பேருந்துகளில் தினந்தோறும் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பல்வேறு தரப்பினர் மேலும் குளிர்சாதன நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக அரசு கூடுதலாக 1000 குளிர்சாதனை பேருந்துகளை வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய வகை பேருந்துகள் மத்தியில் கூடுதல் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தட்டித் தூக்கிய சிவகாசி.. தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை.. வாய்யை பிளக்க வைத்த விருதுநகர்!




நவீன ஏ.சி.பேருந்தில் என்னென்ன வசதிகள் இருக்கும்
இந்த பேருந்துகளில்
- தானியங்கி கதவு.
- நவீன இருக்கைகள்.
- அவசர கால வழி,
- அவசர உதவி பொத்தான்.
- நவீன ஸ்டீயரிங் சிஸ்டம்.
- டிஜிட்டல் மீட்டர்.
- பேருந்து முழுவதும் குளிர்சாதன வசதி.
- டிரான்ஸ்பரன்சி கண்ணாடிகள். (பேருந்தி உள்ளே பயணிக்கும் பொதுமக்கள் ஜன்னல் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தவாறு பயணிக்கும் வகையில் டிரான்ஸ்பரன்சி கண்ணாடிகள்)
சென்னையில் 1,355 குளிர்சாதன வசதி பேருந்துகள்
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தப் பேருந்தில் இடம்பெற உள்ளது. ஏற்கனவே, 355 குளிர்சாதன வசதி உடைய பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 1000 பேருந்துகள் என 1,355 பேருந்துகள் சென்னை மாநகரில் வலம் வர உள்ளன. இதனிடையே, தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பேருந்துகளில் இருப்பிட கண்காணிப்பு கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்களை அமைப்பதற்கு ரூ. 17.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யவும், பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கழகம் போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஏரியில் குளிக்க சென்ற 4 மாணவிகள் உள்பட 5 பேர்.. அடுத்தடுத்து நீரில் மூழ்கி மரணம்.. திருவண்ணாமலையில் பெரும் சோகம்!