AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மக்கள் எப்போதும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் – முதல்வர் விஜய்க்கு எம்.பி கனிமொழி கண்டனம்..

MP Kanimozhi Slams TVK Government: திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய் திறக்கப் போவதில்லை. முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்" எனக் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எப்போதும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் – முதல்வர் விஜய்க்கு எம்.பி கனிமொழி கண்டனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Nov 2026 14:55 PM IST

நவம்பர் 9, 2026: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருச்சியில் இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர், சிவகங்கையில் 2 பேர், தேனியில் காவல் உதவி ஆய்வாளர் எனப் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் 11 கொலை சம்பவங்கள்

குறிப்பாக, தேனி மாவட்டத்தில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்ததைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர சென்னை, திருவள்ளூர், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தலா ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பல தலைமுறைகளாக சத்தமில்லா தீபாவளி.. பட்டாசு வெடிக்காமல் தவிர்க்கும் கிராம மக்கள்.. அதுவும் தமிழகத்தில்.. என்ன காரணம்!

மக்கள் எப்போதும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்!


இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன.

ஒருபுறம் மக்கள் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்க, மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய் திறக்கப் போவதில்லை. முதலமைச்சர் அவர்களே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டையே உலுக்கிய கோரச் சம்பவம்.. தீபாவளி திருநாளில் ஒரே நாளில் 11 பேர் படுகொலை; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், தீபாவளி நாளில் பதிவானதாகக் கூறப்படும் இந்தக் கொலைச் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Follow Us